பக்கம் எண் :
 
சொல்லணியியல்213

பிறை சூடும் பெம்மான் உவந்து உறையும் சேர்வுஎன்?திருவேகம்பம் எ - று.

'நீத்தொழிந்த ஆறைந் தடக்கிப்பின் னிச்சயமே
வாய்த்தமைந்த வாயில்பெண் ணானையே - கூர்த்தகு

வாளேறோ(டு) ஓசை விளைநிலம்இவ் வல்லாற்

கேளாய் உடன்வருவ தில்'

எனவும்,

இதனுள் நீத்தொழிந்த ஆறு - நிலை எனவும்,ஐந்தடக்கி - ஆமை எனவும், வாயில் - கடை எனவும்,பெண்ணானை - பிடி எனவும், வாளேறு - புண் எனவும், ஓசை -இயம் எனவும், விளைநிலம் - செய் எனவும் கூட்டி, 'நிலையாமைகடைப்பிடி, புண்ணியஞ் செய்' எனக் கண்டு கொள்க.

இவ்விரண்டு உண்மைகளும் நட்பாய் இருந்து உறுதிபயக்குமே யன்றி, ஏனையதொன்றும் நட்பினதாய்உடன் வருவதில்லென்க எ - று.

'நல்வினை நாற்கால் விலங்கு நவைசேரும்

கொல்வினை யஞ்சி குயக்கலம் -மெல்ல

உறுதியும் அல்லவும் நாட்பேர் மரப்பேர்

இறுதியில் இன்ப நெறி'

எனவும் வரும்.

இதனுள், நல்வினையை யுடைய நாற்கால் விலங்குயாது? - முயல் எனவும், நவை சேரும் கொல்வினை யஞ்சியாது? - ஆமை எனவும், குயக்கலம் யாது? - அகல் எனவும்,மெல்ல உறுதியையும் உறுதியல்லனவற்றையும்சொல்லும் நாட்பெயர் யாது? - சோதி எனவும்,மரப்பெயர் யாது? - தேறு எனவும் கூட்டி, 'முயலாமையகல், சோதி தேறு' எனக் கண்டு கொள்க.

இவ்விரண்டு உண்மைகளுமே இறுதியிலின்பநெறியாகும் என்றவாறு. இச்சித்திர கவி வினாவும்விடையுமாக அமைதலின், வினாவுத்தரம்எனப்பட்டது.

(வி - ரை) முயல் - எதற்கும் எந்தத் தீங்கையும்விளைவிக்காதது; அச்சம் பொருந்தியது. ஆதலின் அது'நல்வினை நாற்கால்' என்ற தொடரால்குறிக்கப்பட்டது. ஆமை - இதுவும் எதற்கும் தீங்குஇழைக்காதது. ஆதலின் இதனைக் 'கொல்வினை யஞ்சி'என்றார். சுவாதி - இருபத்து நான்குநட்சத்திரங்களுள் ஒன்று. சோதி -சோதித்துப்பார் என்னும் பொருள்படுதலின்,உறுதியானது இது உறுதியற்றது இது என்பவற்றைச்சோதித்துப்(ஆராய்ந்து) பார் என்னும் பொருள் படவந்தது. தேறு - தேற்றா மரம்; 'மடிந்த தேறு பொடிந்தவேல்' என வரும் கலிங்கத்துப் பரணியாலும் இதனைஅறியலாம்.

(7) காதைகரப்பு என்பது ஒரு செய்யுள் முடியவெழுதி, அதன் ஈற்று மொழிக்கு முதலெழுத்துத்தொடங்கி ஒவ்வோர் எழுத்து இடையிட்டு வாசிக்கப்பிறிதொரு செய்யுட் போதுவது.

எ - டு :

 'தாயேயா நோவவா வீரு வெமதுநீ

பின்னை வெருவா வருவதொ ரத்தப

வெம்புகல் வேறிருத்தி வைத்திசினிச் சைகவர்

தாவா வருங்கலநீ யே'