இ - ள் : அடைந்தவர் உள்ளத்தே வாழ்கின்ற விளக்கமாயுள்ளாய்! நஞ்சின்கண்உண்டாகிய பெருகிய நிறம் நிறைந்து பொருந்தினதிருமிடற்றை யுடைய பெரிய சோதியாயுள்ளாய்!அழகிய மதியையுடைய ஆகாயமானது சிறுகப் பெருகியவொளியே திருமேனியாயுள்ளாய்! எனதுள்ளம் நினதுஅடியை மறக்கும் எல்லையை ஒழிப்பாயாக எ - று. இது நாகவுருவத்தில் பந்திக்கப்படுவதாதலின், நாகபந்தம்எனப்பட்டது. இன்னும் நாகபந்தங்கள் பல உள. உதாரணமாகப்பின் வருவதைக் காண்க. அட்ட நாகபந்தத்தின் விதி ஒருநான்கக் கரத்தொடுநாற் பத்தொன் றாமா | றுடனாற்பத் தைந்தாமெட் டுடனைந் நான்காம் | இருளறுபன் னிரண்டுடனே பதினெட் டாகும் | இருபத்தி ரண்டுடனே நாற்பத் தேழாம் | பரவுமிரு பத்துநான் குடன்முப் பத்தொன் | பானாமுப் பான்மூன்றோ டைம்பத் தொன்றாம் | | அருமுப்பத் தேழுடனே நாற்பத் தொன்பா | னாமட்ட நாகபந்த மாஞ்செய் யுட்கே. |
இ - ள் : நான்காம் எழுத்துநாற்பத்தோராம் எழுத்தாகவும், ஆறாம் எழுத்துநாற்பத்தைந்தாம் எழுத்தாகவும், எட்டாம் எழுத்துஇருபதாம் எழுத்தாகவும், பன்னிரண்டாம் எழுத்துப்பதினெட்டாம் எழுத்தாகவும், இருபத்திரண்டாம்எழுத்து நாற்பத்தேழாம் எழுத்தாகவும்,இருபத்துநான்காம் எழுத்து முப்பத்தொன்பதாம்எழுத்தாகவும், முப்பத்துமூன்றாம் எழுத்துஐம்பத்தோராம் எழுத்தாகவும், முப்பத்தேழாம்எழுத்து நாற்பத்தொன்பதாம் எழுத்தாகவும் வரும்படி,ஒற்றுள்பட ஐம்பத் தோரெழுத்தினால் ஒரு செய்யுட் செய்து உபதேச முறைமையால் அட்ட நாகபந்தம் வரைந்து அதில் அடைத்துக் கொள்வது அட்ட நாகபந்தத்தின் விதியாம் எ- று. (6) வினாவுத்தரம் என்பது, வினவினதொருசொற்றொடரைப் பிரித்து, அப்பதந்தோறும்வினாயதற்கு உத்தரமாகப் பதப்பொருள் உரைத்துக்,கடைக்கால் அவ்வினாயதற்கு உத்தரமானஅச்சொற்றொடர் முழுவதும் ஒருபொருளாக்கிஉரைப்பது. அப்பதம் விரிக்குங்கால், செவ்வன் விரியாது அருமை தோன்ற விரித்துக்காட்டுவது. எ - டு : | 'பூமகள்யார்? போவானை யேவுவான்ஏதுரைக்கும்? | | நாமம் பொருசரத்திற்(கு) ஏதென்பர்? தாமழகின் | | பேரென்? பிறைசூடும் பெம்மான் உவந்துறையும் | | சேர்வென்? திருவேகம் பம்? |
எனவும், இதனுள் பூமகள் யார் - திரு எனவும்; போவானைஏவுவான் ஏதுரைக்கும்? - ஏகு எனவும்; நாமம்பொருசரத்திற்கு ஏது என்பர்? - அம்பு எனவும்;அழகின் பேர் என்? - அம் எனவும் கூட்டித் 'திருவேகம்பம்'எனக் கண்டு கொள்க.
|