நேரிசை வெண்பா எ - டு : | 'அருளின் றிருவுருவே யம்பலத்தா யும்பர் | | தெருளின் 1மரு வாருசிர்ச் சீரே - பொருவிலா | | வொன்றே யுமையா ளுடனே யுறுதிதரு | | குன்றே தெருள வருள்' |
எனவும், இ - ள் : அறத்தினது அழகிய மேனியாய்!திருச்சிற்றம்பலத்தினை யுடையாய்! தேவர்கள்அறிவிற்கும் எட்டாதாய்! அழகிய புகழையுடையாய்!குற்றமில்லாத ஏகரூபத்தையுடையாய்! உமையோடுபொருந்தின மலைபோல்வாய்! யாங்கள் தெளிய அறிவைஅருள்வாயாக எ - று. அறிவு என்னும் சொல் வருவிக்கப்பட்டது. இன்னிசை வெண்பா | 'மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சு | | பெருகொளியான் றேயபெருஞ் சோதி திருநிலா | | வானஞ் சுருங்க மிகுசுடரே சித்த | | மயரு மளவை யொழி' |
எனவும் வரும்,
1. 'மருவாத சிர்ச்சீரே என்பதும் பாடம்.
|