மாலையை எப்பக்கம் திரும்பினும் அது ஒரேதன்மைத்தாய் இருத்தல் போல, இச்செய்யுட்களும்எவ்வாறு மாற்றி வாசிப்பினும் ஒரே தன்மைத்தாய்இருத்தலின் மாலைமாற்று எனப்பட்டது. (வி - ரை)இப்பாடல்கள் மூன்றையும்இறுதியில் தொடங்கி படிப்பினும், முதற்கண் இருந்துபடிப்பது போலாகுதல் காண்க. திருஞான சம்பந்தர்தேவாரத்தும், | 'யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா | | காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா' |
என இங்ஙனம் ஒரு பதிகமே வருதல் காண்க. (4) எழுத்து வருத்தனம் என்பது, ஓரெழுத்தான் ஒருமொழியாய்ப் பொருள் பயந்து, பின் ஓரெழுத்துஏற்றுப் பிறிதொரு மொழியாய்ப் பொருள் பயப்பது. எ - டு : | 'ஏந்திய வெண்படையும் முன்னாள்எடுத்ததுவும் | | பூந்துகிலும் மாலுந்தி பூத்ததுவும் - வாய்ந்த | | உலைவில் எழுத்தடைவே ஓரொன்றாச் - சேர்க்கத் | | தலைமலைபொன் தாமரையென் றாம்' |
இ - ள் :திருமால்தாங்கிய கம்புவும், அவன் எடுத்த நகமும், அவனதுஆடையாகிய கநகமும், அவன் உந்தி மலர்ந்தகோகநகமும் என்னப்பட்ட இவற்றில், கேடில்லாதஎழுத்தின் அடைவே யென்று ஒன்றின் ஓரெழுத்தாகஎடுத்துச் சேர்க்கப் பின்பு அது தலையென்றும்,மலையென்றும், பொன்னென்றும், தாமரையென்றும் ஆம்எ - று. அவ்வாறு சேர்த்தல்எங்ஙனம்? எனின், கம்பு என்பதில், 'கம்' என்கிற எழுத்தைப் பிரித்துத் 'தலை'எனவும்; நகம் என்பதில், ந - என்கிறஎழுத்தைப் பிரித்து, முன் கம் என்பதற்குமுன் கூட்டி 'நகம்'ஆக்கி 'மலை' எனவும்; கநகம் என்பதில், க -என்கிற எழுத்தைப் பிரித்து, முன் நகம் என்பதற்குமுன் கூட்டிக் 'கநகம்' ஆக்கிப் 'பொன்' எனவும்; கோகநகம் என்பதில் கோ - என்கிற எழுத்தைப் பிரித்து, முன்கநகம் என்பதற்கு முன் கூட்டிக் 'கோகநகம்'ஆக்கித் 'தாமரை' எனவும்' கொள்க. இதில், எழுத்துக்களைப் பெருக்கிமொழியாக்கிப் பொருள் கொள்ளலால், இது எழுத்துவருத்தனம்எனப்பட்டது. எழுத்து வருத்தனம் - எழுத்துப் பெருகுதல்.வருத்தனம் - பெருகுதல். (வி - ரை) கம்பு - சங்கு. கம் - தலை. நகம் - மலை.கநகம் - பொன். கோகநகம் - தாமரை. (5) நாகபந்தம் என்பது, இரண்டு பாம்புகள்தம்முள் இணைவனவாக உபதேச முறைமையான் எழுதி, ஒருநேரிசை வெண்பாவும், ஓர் இன்னிசை வெண்பாவும்எழுதிச், சந்திகளில் நின்ற எழுத்தே மற்றையிடங்களிலும் உறுப்பாய் நிற்கப் பாடுவது.மேற்சுற்றுச் சந்தி நான்கினும் நான்கெழுத்தும்,கீழ்ச்சுற்றுச் சந்தி நான்கினும் நான்கெழுத்தும்,இரண்டு பாம்புகளின் நடுச்சந்தி நான்கினும் இரண்டு பாட்டிற்கும் பொருந்த நான்கெழுத்துமாகச் சித்திரத்தில் அடைப்பது.
|