பக்கம் எண் :
 
சொல்லணியியல்209

நிறத்தையும் உடைய, பகைத்திறச் சொல் கெட -பகைஞராகிய அவுணசாதி யென்னும் வார்த்தை மாள,செற்ற கச்சிப்பதி - செறுத்த காஞ்சிபுரப்பெரும்பதியில் உள்ள, துர்க்கை - கொற்றவை,பொற்புத் தகைத்த - அழகு தங்கிய, தித்தித்ததுத்தத்த சொல் - இன்பந் தராநின்ற யாழினிசைபோன்ற சொல்லையுடைய, தத்தை - கிள்ளையையொப்பாளிடத்து, பத்தித் திறத்தே திகைத்த -அன்பு செய்யாது அறிவழிந்த, சித்தத்தைத்துடைத்தபின் - உள்ளத்தை நீக்கிய காலத்து,பற்றுக் கெட - இருபற்றும் கெடுதற்கு ஏதுவாகிய,கற்பதே - ஞானத்தை அறிவது எ- று.

கிள்ளை மொழியினை யொத்த மொழியை யுடையதுர்க்கை எனக் கூட்டுக. இச்செய்யுளில், முதல்மூன்றடிகளிலும் ஆராயின் ஈற்றடி எழுத்துக்கள்காணப்படும். இங்ஙனம் ஓரடியின் எழுத்துக்கள்மற்றையடிகளில் மறைந்து நிற்றலால், இது கூடசதுக்கம்எனப்பட்டது. கூடம் - மறைவு. சதுக்கம் - நான்கடிக்கூட்டம்; இது செய்யுளை உணர்த்தும்.

(வி - ரை)கொற்றவை யிடத்து அன்புசெய்தாலன்றி ஞானம் உளதாகாது என்பது கருத்து.சதுர்த்தம் - சதுக்கம் என்றாயிற்று. நான்கு அடிகள்உள்ள பாடலில், நான்காம் அடியிலுள்ள எழுத்துக்கள்ஏனைய மூன்றடிகளிலும் மறைந்து நிற்பது இதன்இலக்கணமாகும்.

(3) மாலைமாற்று என்பது, ஒரு செய்யுளை ஈறு முதலாகவாசித்தாலும் அச்செய்யுளே யாவது.

எ - டு :

'நீவாத மாதவா தாமோக ராகமோ

தாவாத மாதவா நீ'

 எனவும்,

இ - ள் : நீவாத - நீங்காத, மா தவா -பெரிய தவத்தையுடையாய்!, தா மோக ராகமோ தாவாது -மிக்க மயக்க வேட்கை கெடாது; (ஆதலால்) அ மாது -அழகிய மாதினுடைய, அவா - ஆசையை, நீ- நீக்குவாயாக எ- று.

'வாயாயா நீகாவா யாதாமா தாமாதா

யாவாகா நீயாயா வா'

எனவும்,

இ - ள் : வாயா யா - எங்கட்குக் கிடையாதனயாவை?, நீ காவாய் - நீ அருள் புரிவாயாக!, யாது ஆம் -என்னாம்?, மாது ஆம் - மாதாகிய இவள், மா தா - மிக்கவருத்தமாவள்; யா நீ ஆகா - யாவை நினக்கு ஆகாதன?,ஆயா வா - ஆயனே நீ வருவாயாக எ - று.

'பூவாளை நாறுநீ பூமேக லோகமே

பூநீறு நாளைவா பூ'

எனவும் வரும்,

இ - ள் : பூவாளை - இயல்பாய்ப்பூப்பில்லாதவளைக் கலந்து, நாறும் நீ - புலால்கமழும் நீ, பூ மேகம் லோகம் ஏ - எமக்குப் பூமழையும் பொன்மழையும் பொழியும் மேகமோ?, பூ நீறு நாளை வா -பூவும் திருநீறும் புனைந்து நாளைவா, பூ - இவள்இப்பொழுது பூப்பினளாய் இருக்கின்றாள் எ- று.

பூப்புனைதல் புலால் நாற்றம் நீங்க. திருநீறுபுனைதல் குற்றம் நீங்க.