இ - ள் : அன்னை போல் இனிய நன்மை செய்பவனே! அம்பிகைக்கு நாயகனே! உமையை இடப்பாகத்தில் உடையவனே! கையில் நெருப்பைத் (மழுவைத்) தாங்கிய சடைக்கடவுளே! வாசனை தங்கிய நீண்ட சடைமுடியை உடையவனே! குற்றத்தினின்று நீங்கி நின் அருள் பெற்று வாழ்ந்தவர்களுடைய துன்பஞ் சூழ்ந்த இருவினைகளைத் தீர்க்கின்ற எமது கடவுளே! முத்தியின்பத்தை உடையவர்கள் துதிக்கின்ற ஏக வஸ்துவே! நினைப்பவர்க்கு அமுதம் போன்றவனே! தேவர்களுக்கு நாதனே! என்னுடைய ஆசையைத் தீர்ப்பாயாக எ - று. இதனுள், 'ஆத ரந்தீர் மாது பங்கா! ஏத முய்ந்தார் ஓது மொன்றே!' எனவும், 'அன்னைபோ லினியாய்! வன்னிசேர் சடையாய்! இன்னல்சூழ் வினைதீர் உன்னுவா ரமுதே!' எனவும,் 'அம்பிகா பதியே வம்புநீண் முடியாய்! எம்பிரா னினியார்? உம்பர்நா யகனே!' எனவும் மூன்று வஞ்சித்துறைகள் வந்தவாறு காண்க. இச்செய்யுட்களுக்கும் முதல் கட்டளைக்கலித்துறையின் பொருள்களே பெரும்பாலும் அமையும். இவற்றுள், 'எம்பிரா னினியார்' என்பதனை வினாவாகக் கொள்ளின், ' எமது கடவுளே! இனி எமக்கு உன்னையன்றி வேறுகதி யாவர்?' என்று பொருள் கொள்க. இதுவுமது எ - டு : | 'சங்கந்தா பூணாரந் தாமே கலைதாநற் | | புங்கவன்மால் காணாப் புலவுடைய - கங்கரா! | | கோணா கலாமதிசேர் கோடீர! சங்கரா! | | சோணா சலா!சலமே தோ?' |
இ - ள் : நல்ல பிரமனும், திருமாலும் முறையே முடியையும் அடியையும் தேடிக் காண முடியாதவனும், ஊன் தங்கிப்புலால் நாறும் மழுப்படையை யுடையவனுமாகிய அரனே! வளைவாகிய மூன்று கலைகளையுடைய சந்திரன் சேர்ந்த சடையையுடையவனே! சங்கரித்தல் தொழிலை யுடையவனே! அருணாசலத்தில் உள்ளவனே! சங்கு வளையலைக் கொடு; அணியத்தக்க ஆரத்தைக் கொடு; மேகலாபரணத்தைக் கொடு; உனக்கு மாறுபாடு யாது? எ - று. இவ்வெண்பாவே, 'பூணாரந் தாமே கலைதாநற் புங்கவன்மால் காணாப் புலவுடைய கங்கரா! - கோணா கலாமதிசேர் கோடீர! சங்கரா! சோணா சலா!சலமே தோ?சங்கந் தா' எனவும்,
|