பக்கம் எண் :
 
பொருளணியியல்47

'ஒவத்தன்ன ........ தாமரை ' என்பதன் பொருள் :- இந்திர கோபத்தை யொத்த பூந்தாதைத் தன்னிடத்து உதிர்த்தலால் . அத்தாது சேர்ந்து சித்திரத்தை ஒத்த நீருண்ணும் துறையிடத்தே நின்று , எழுகின்ற பெரிய முலையினை யொத்த பெரிய அரும்பு நெகிழ்ந்து அழகிய முகம்போல மலர்ந்த தெய்வத்தன்மையையுடைய தாமரை மலர் என்பதாகும் . கோவத்தன்ன கொங்கு சேர்பு உறைத்தலின் ஒவத்தன்ன எனக்கூட்டியுரைக்க . ஒவம் - சித்திரம் .

பண்டுதொட்டுப் பெண்ணின் முலைக்கு அரும்பையும் , முகத்திற்குத் தாமரையையும் உவமையாகக் கூறல் மரபு . ஈண்டு அவ்வியல்பினை மாற்றி முலையையும் முகத்தையும் உவமையாக்கியும் அரும்பையும் தாமரையையும் பொருளாக்கியும் கூறப்பட்டிருத்தலின் விபரீதவுவமை யாயிற்று .

'பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
மருளறு சிறப்பினஃ துவம மாகும் ' தொல் - பொருள் - உவம - 9

என்ற நூற்பாவில் இது அடங்கும் .

(15) இயம்புதல் வேட்கை யுவமை என்பது பொருளை இன்னது போலுமென்று சொல்ல வேட்கின்றது என் உள்ளம் என்பது .

எ-டு : 'நன்றுதீ தென்றுணரா தென்னுடைய நன்னெஞ்சம்
பொன்றுதைந்த பொற்சுணங்கிற் பூங்கொடியே ! - மன்றல்
மடுத்ததைந்த தாமரைநின் வாண்முகத்திற் கொப்பென்
றெடுத்தியம்ப வேண்டுகின்ற தின்று '

(இ-ள்) பொன் துதைந்த போலும் அழகிய சுணங்கினையும் பொலிவினையும் உடைத்தாய்க் கொடியை யொப்பாய் ! நன்று தீது என்பதனை ஒன்றுந்தெளியாது நறுநாற்றத்தை யுடைத்தாய் மடுவிடத்து நின்று தயங்கா நின்ற தாமரை , நின் ஒளியினையுடைத்தாகிய முகத்திற்கு ஒப்பாம் என்று எடுத்துரைக்க வேண்டுகின்றது இன்று என் நல்ல நெஞ்சம் என்றவாறு .

துதைதல் - செறிதல் . மன்றல் - மணம் . இயம்பல் - சொல்லல் . வாள் - ஒளி .

வி-ரை: இதன்கண் எடுத்துக் கூறப்படும் பொருள் முகம் , நன்றென்றோ தீதென்றோ உணராமல் இம்முகத்திற்குத் தாமரையை ஒப்பாகச்சொல்ல வேண்டுகின்றது என் உள்ளம் என்று கூறப்பட்டிருத்தலின் இது இயம்புதல் வேட்கையுவமை யாயிற்று .

(16) பலபொருளுவமை என்பது ஒருபொருட்குப் பல வுவமை காட்டுவது .

எ-டு : 'வேலுங் கருவிளையு மென்மானுங் காவியும்
சேலும் வடுவகிருஞ் செஞ்சரமும் - போலுமால்
தேமருவி யுண்டு சிறைவண் டறைகூந்தற்
காமருவு பூங்கோதை கண் '

(இ-ள்) மதுவை விரும்பியுண்டு சிறைவண்டு முரல்கின்ற கூந்தலையும் , அழகிய மாலையையும் உடையாளுடைய கண்களானவை வேலையும் , கருவிளை