இங்ஙனமுஞ் சொல்லும்; அதற்குச் செய்யுள்:
‘உலம்புனை தோள்மன்னர்ஓ டவல் லத்தட் டவருரிமை
நலம்புனை கோதையர் அல்லல்கண் டான்கொல்லிச் சாரல்நண்ணி
வலம்புனை வில்லோ டிருவிப் புனங்கண்டு வாடிநின்றால்
சிலம்பனை நையற்க என்னுங்கொல் வேங்கைச் செழும்பொழிலே.’
இவ்வாறுஞ் சொல்லும்; அதற்குச் செய்யுள்:
‘பொருங்கண்ணி சூடிவந் தார்படப் பூலந்தைப்
பொன்முடிமேல்
இருங்கண்ணி வாகை அணிந்தஎங் கோன்கொல்லி ஈர்ஞ்சிலம்பிற்
கருங்கண்ணி காக்கின்ற பைம்புனங் கால்கொய்ய நாளுரைத்த
பெருங்கண்ணி யாரைப்பொன் வேங்கையென் றோஇன்னும
பேசுவதே.’
இங்ஙனமுஞ் சொல்லும்; அதற்குச் செய்யுள்:
‘பைந்நின்ற ஆடர வேரல்கு லாள்செல்ல நாட்பணித்த
இந்நின்ற வேங்கை குறையா திளஞ்சந்த னங்குறைத்தார்
மெய்ந்நின்ற செங்கோல் விசய சரிதன்விண் தோய்பொதியின்
மைந்நின்ற சாரல் வரையக வாணர் மடவியரே.’
(158)
இவ்வகை செறிப்பறிவுறுக்கப்பட்ட தலைவன் தெருள்வானாயின்,
‘இன்ன நாள் வரைவல், அத்துணையும் இவளை ஆற்றிக்கொண்டிரு, நினக்கு
அடைக்கலம்’ எனக் கைப்பற்றும்; கைப்பற்ற, அதனைத் தோழி சூளுறவாகக்
கருதினாள். உலகத்துச் சூளுறுவார், பார்ப்பாரையும் பசுவையும்
பெண்டிரையும் தொட்டுச் சூளுறுபவாகலான், சூளுற்றானென்பதனை
நினைந்து ’நீர் வரைவல் என்றதே அமையாதோ? சூளுற வேண்டுமோ?
பொய்த்ததும் வாய்த்ததும் உடையாரன்றே சூளுறுவார்? மெய்யல்லது
சொல்லாதார்க்குச் சூளுறவு வேண்டுமோ? நின்கண்ணும் பொய்யுண்டாகின்,
மெய்யென்பது, இவ்வுலகத்து நிலைபெற்றவழி இல்லையாகாதே’ என்னும்;
அதற்குச் செய்யுள்:
சூளுறூஉந் தோன்றற்குத் தோழி கூறல்
‘நெய்யொன்று வேல்நெடு மாறன்தென் னாடன்ன நேரிழையிம்
மையொன்று வாட்கண் மடந்தை திறத்திட் டறந்திரிந்து
பொய்யொன்று நின்கண் நிகழுமென் றாற்பின்னைப் பூஞ்சிலம்பா
மெய்யொன்றும் இன்றி ஒழியுங்கொல் லோவிவ் வியலிடத்தே.’
‘திரைப்பால் இரும்புனற் சேவூர் எதிர்நின்ற சேரலர்கோன்
வரைப்பால் அடையச்சொற் றான்வையை அன்னாள்
திறத்துவண்டார்
விரைப்பால் நறுங்கண்ணி யாய்பொய்ம்மை நீசொல்லின் மெய்ம்மை
துரைப்பார் பிறரினி யாவர்கொல் லோஇவ் வுலகினுள்ளே’ [யென்ப
(பாடம்) 1. வினயச் சரத்தன்விண்.
|