பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - களவு 115
 

                         சூத்திரம் - 21

              இரவுமனை யிகந்த குறியிடத் தல்லது
              கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை
.

என்பது என்னுதலிற்றோ எனின், இரவுக்குறி வகுக்கப்பட்ட இடம்
வேறுபாடுடையது கண்டு, அவ் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

      மேல், ‘
இரவுக்குறி இல்வரை இகவாது’ என, இல்வரை
யகத்ததன்றெனிற் சாரான். அவற்றுள்ளும் இரவுக்குறியாதல் சென்றது:
சென்றதனை நீக்கியவாறு.

     
இதன் பொருள்: இரவு மனை இகந்த என்பது-இரவின் கண்
மனையகத்து நீங்கிய என்றவாறு; குறியிடத்து அல்லது என்பது-குறிக்கப்பட்ட
இடத்தல்லது என்றவாறு; கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை என்பது-
தலைமகற் சேர்தல் தலைமகட்கு இல்லை என்றவாறு.

      எனவே, இல்வரைப்பகத்தே ஆக என்பதூஉம், மனையகத்து ஆகற்க
என்பதூஉம், உணரப்பட்டது. அட்டில், கொட்டகாரம், பண்டசாலை,
கூடகாரம், பள்ளியம்பலம், உரிமையிடம், கூத்தப்பள்ளி என இவற்றுள்
நீங்கிச், செய்குன்றும், இளமரக்காவும், பூம்பந்தரும், விளையாடிடமும்,
அவற்றைச் சார்ந்தனவற்றுள்ளும் பிறவற்றுள்ளும் ஆக என்றவாறு. எனவே,
பகற்குறியிடம்போல வேறுபட்டது ஆகற்க இரவிற்குறியிடம் என்றவாறு.
அஃதேயெனின், மனையகத்து ஆக அழிவதுண்டோ எனின், குரவர்கள்
உறையும் இடமாதலின் தெய்வத்தானம் என்று கருதப்படும். அல்லதூஉம்,
புகவும் போகவும் அருமையுடைமையானும் ஆகாது என்பது; என்றார்க்குச்
செய்யுள்:

       
 ‘வால மனையகத்துச் சார்ந்தான் தலைமகன்’

என்பதுபட வந்தன எனின், அவை அகமல்ல, அகப்புறத்தே அடங்கும்
என்பது.

       
 ‘இரவுக் குறியொன் றெய்தும் அதுவே
         மனையோர் கிளவி கேட்கும் இடத்துச்
         செலவுவர வில்லாத் தொழிலிற் றாகி
         மனையிறந் தெல்லையின் மாண்புடைத் தாகும்
         அகப்புறம் ஆயின் மறுதலைப் படுமே’
 

என்றார் பிறரும் எனக்கொள்க.                                  (21)