பக்கம் எண் :
 
120இறையனார் அகப்பொருள்

மகளிர், நீர் ஏயினவாறு ஒழுகுவதல்லது, ‘‘இதுகொண்டு இது செய்ம்மின்’’
என்றற்குத் தக்கேமல்லேம்’’ என்னும்; அதற்குச் செய்யுள்:

                   
முலைவிலை கூறல்

  ‘என்னால் இதுசெய்கென் றென்சொல்ல லாமிகற் பாழிவென்ற
  மின்னார் அயிற்படைச் செங்கோல் விசாரிதன் வீங்கொலிநீர்த்
  தென்னா டெனினுங்கொள் ளார்விலை யாத்தமர் சீர்செய்வண்டு
  முன்னாள் மலரென் றணையுங்கண் ணேழை முகிழ்முலைக்கே.’  ( )

  இதுகேட்ட தலைமகன், ‘உடன்கொண்டுபோவது துணிந்தே னெனினும்,  
நிழலும் நீரும் இல்லாத அழல்வெங்கானம் ஆற்றகில்லாள்கொல்லோ’
என்னும்; என்ன, ‘அன்ன வெங்கான மெனினும் எம்பெருமாட்டி
நும்மொடுவரப் பெரிதும் இனியவாம்’ என்னும்; அதற்குச் செய்யுள்:
ஆதரங் கூறல்

 
‘மால்புரை யானை மணிமுடி மாறன்மண் பாய்நிழற்றும்
  பால்புரை வெண்குடைத் தென்னன் பறந்தலைக் கோடிவென்ற
  வேல்புரை வெம்மையங் கானம் எனினும்அவ் வேந்தன்செய்ய
  கோல்புரை தண்பைய வாநும்மொ டேகினக் கொம்பினுக்கே.’  (174)

  ‘கழலணி போர்மன்னர் கானீர்க் கடையற் படக்கடந்த
  தழலணி வேல்மன்னன் சத்துரு துரந்தரன் தன்முனைபோன்
  றழலணி வெம்மைய ஆயினுங் கானம் அவன்குடையின்
  நிழலணி தன்மைய வாநும்மொ டேகினெம் நேரிழைக்கே.’    (175)

      அதுகேட்டு, ‘ஆயின், உடன்போக்கு வலித்தேன், நீ இதனை
அவட்குச் சொல்லவேண்டும்’ என, ‘நன்று, எம்பெருமான் அருளிச்செய்தது
எம்பெருமாட்டிக்கு உணர்த்துவல்’ என்று, தலைமகனை வலங்கொண்டு
போந்து, தலைமகளுழைச் சென்று, அவள் குறிப்பறிந்து, ‘எம்பெருமாட்டி,
நம்பெருமான் நம்மைத் தம்மோடு உடன்கொண்டுசெல்லக் கருதுகின்றார்,
நின்குறிப்பு என்னை?’ என்னும்; என்றவிடத்து, உடம்படுதலும்
உடம்படாதொழிதலும் என இரண்டல்லதில்லை; சென்று வழிபடுமேயெனின்
நாணிலளாயினாளாம்; உடன்படாளாயின் கற்பிலளாயினாளாம்;
இரண்டினுள்ளும் எத்திறத்த ளாயினாளோ எனின், நாணுக் கற்பு என்னும்
இரண்டல்லவே அவள்கண்ணுள்ளன, அவற்றுள் நாணிற் கற்பு வலியுடைத்து;
என்னை வலியுடையவாறு எனின்,