மகட்பேச்சுரைத்தல்
‘நீரணி வேலி நெடுங்களத் தொன்னார் நிணம்அளைந்த
போரணி வேல்மன்னன் கன்னியன் னாள்தன்னைப்
பொன்னணிவான்
காரணி வார்முர சார்ப்பப் பிறருங் கருதிவந்தார்
வாரணி பூங்கழல் அண்ணலென் ஆகி வலிக்கின்றதே.’
(167)
‘வேலைத் துளைத்தகண் ஏழை திறத்தின்று விண்ணுரிஞ்சும்
சோலைச் சிலம்ப துணிவொன் றறிந்து சுடருமுத்த
மாலைக் குடைமன்னன் வாள்நெடு மாறன்வண் கூடலின்வாய்க்
காலைத் திருமனை முற்றத் தியம்புங் கடிமுரசே.’
(168)
‘போர்மலி தெவ்வரைப் பூலந்தை வென்றான் புகாரனைய
வார்மலி கொங்கை மடந்தையை வேறோர் மணங்கருதிக்
கார்மலி வார்முர சார்ப்பப் பிறருங் கருதிவந்தார்
ஏர்மலி தாரண்ணல் என்னோ இதன்திறத் தெண்ணுவதே.’ (169)
‘வேயும் புரையுமென் தோளி திறத்தின்றை எல்லையுள்விண்
தோயுஞ் சிலம்ப துணிவொன் றறிந்துதொன் னூற்புலவர்
ஆயும் தமிழரி கேசரி கூடல் அகனவர்வாய்
ஏயுந் திருமனை முற்றத் தியம்பும் எறிமுரசே.’
(170)
இங்ஙனமுஞ் சொல்லும்:
பொன்னணிவுரைத்தல்
‘குன்றொத்த யானைச்செங் கோல்நெடு மாறன்தென்
கூடலன்ன
மென்தொத் தணிகுழல் ஏழை திறத்து விளைவறிந்தே
இன்றொத்த தொன்று துணிநீ சிலம்பவின் றாயினெம்மூர்
மன்றத்து நின்று முழங்குங்கொல் நாளை மணமுரசே.’
(171)
‘நலம்புரி தெய்வமென் னாய்செய்வ தென்னறை யாற்றுவென்ற
உலம்புரி தோள்மன்னன் தென்புனல் நாட்டொரு வற்கியைந்து
குலம்புரி கோதையைக் காப்பணிந் தார்கொடி மாடமுன்றில்
வலம்புரி யோடு முழங்குங்கொல் நாளை மணமுரசே.’
(172)
இங்ஙனஞ் சொல்லப்பட்ட தலைமகன், ‘என்னாற் செய்யப்பட்டது
என்னோ?’ என்னும். எனத், தோழி, ‘என்னை வினவற் பாலையல்லை, நீ
இதற்குத் தக்கவாறு அறிந்து செயற்பாலை’ என்னும் என்பது.
‘நுண்ணறி வுடையோர் நூலொடு
பழகினும்
பெண்ணறி வென்பது பெரும்பே தைமைத்தே’
என்பதாகலான், ’நீ ஒரு பொருளை விகற்பித்து அறியுந்துணை, யான்
அறியுமாறில்லை பிற; அல்லதூஉம், யாம் குற்றேவன்
|