| 
     
           
     
     களவு வெளிப்பட்ட பின்றை வரைதல்
     என்பது-அறத்தொடுநிலைநிகழ்ந்த பின்றை வரைதல் என்றவாறு;
 
 
                 
     
      களவு வெளிப்படா முன்னுற வரைதலும் களவு வெளிப்பட்ட பின்றைவரைதலும் ஆமாறு முன்னே சொல்லிப் போந்தாம்; அவ் வுரையே இதற்கும்
 உரைத்துக் கொள்க.
 
 என்று ஆயிரண்டு என்ப வரைதலாறு என்பது-என்று இரண்டு வகை
 என்பர் வரைதல் முறை என்றவாறு.                              
     (24)
 
 சூத்திரம்-25
 
 பட்ட பின்றை வரையாக் கிழவன்
 நெட்டிடை கழிந்து பொருள்வயின் பிரிதலும்
 பொருள்வயின் பிரியா தொருவழித் தணத்தலும்
 புரைவ தென்ப கற்பால் ஆன.
 
 என்பது என்னுதலிற்றோ எனின், அறத்தொடு நிலைநின்ற பின்றை  வரும்
 விகற்பம் உணர்த்துதல் நுதலிற்று.
 
 மேற் சூத்திரத்து வரையும் இடம் உணர்த்தினார், அவ்வரைவிற்கு
 வரும் இடையீடு இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று.
 
 இனித், ‘தலைமகளை வரைந்தெய்தினானல்லன். அறத்தொடு
 நின்றவாறே பிரிந்தான், ஆகலான், அன்னாள் கற்பினாளோ? களவினாளோ?’
 என்ற மாணாக்கற்கு, இவள் கற்பினாளே எனப்படும் என்றவாறு.
 
 இதன் பொருள்: பட்ட பின்றை வரையாக் கிழவன் 
     என்பது-
 அறத்தொடு நிலைநின்ற பின்றை வரைந்தெய்தாத தலைமகன் என்றவாறு;
 நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிதலும் என்பது-நாடும் காடும்
 இடையிட்ட பல்காதமும் நீங்கிப் பொருட்குப் பிரியும் பிரிவும் என்றவாறு;
 பொருள்வயிற் பிரியாது ஒருவழித்தணத்தலும் என்பது-பொருட்குப் பிரியாது
 ஓரிடத்தினனாய் உறைதலும் என்றவாறு; புரைவது என்ப கற்பால் ஆன
 என்பது-அவை பொருந்தும் கற்பினாளாகற்கு என்றவாறு.
 
 அறத்தொடு நிலைநின்றமை என்னை தலைமகன் அறியுமாறு எனின்,
 தோழியால் உணர்த்தப்பட்டு அறியும் என்பது.
 
 இதன் கருத்து, இவ் விரண்டு இடையீட்டின்கண்ணும் தலைமகள்
 ஆற்றாளாய காலத்துத் தோழி ஆற்றுவித்தலும்,
 |