பக்கம் எண் :
 
132இறையனார் அகப்பொருள்

                        சூத்திரம்-24
 
          களவு வெளிப்படா முன்னுற வரைதல்
         களவு வெளிப்பட்ட பின்றை வரைதலென்று
         ஆயிரண் டென்ப வரைதல் ஆறே.

என்பது என் நுதலிற்றோ எனின், களவு,

          
‘வெளிப்பட்ட பின்றைக் கிளவியு முரிய’     (இறைய-23)

என்றமையான், வெளிப்பட்ட பின்றை வரைதல் முறைமையானல்லது இல்லை
எனக் கொண்டுநின்ற மாணாக்கற்கு, மற்றும் வரைதலாறு உண்டென்பது
உணர்த்துதல் நுதலிற்று;

      இதன் பொருள்: களவு வெளிப்படா முன்னுற வரைதல் என்பது-
லரானும் சிலரானும் அறியப்பட்டது இவ்வொழுக்கம் என்னுங் கருத்து எய்தா
முன்னம் வரைதல் என்றவாறு;
 

      இயற்கைப் புணர்ச்சி, புணர்ந்த பின்னே தெருண்டு வரைதலும்
உரியன்,

      அங்குத் தெருளானாய்விடின், பாங்கற்கூட்டங் கூடித் தெருண்டு
வரைதலும் உரியன்,

      அங்குத் தெருளானாய்விடின், தோழியை இரந்துபின்னின்று அவள்
தனையுறாத் தகைமை செய்யத் தெருண்டு வரைதலும் உரியன்.

      அங்குத் தெருளானாய்விடின் மதியுடம்படுத்து இரந்து பின்னின்ற
நிலைமைக்கண் தோழி சேட்படுப்பத் தெருண்டு வரைதலும் உரியன்,

      அங்குத் தெருளானாய்விடின், தோழியிற் கூட்டங் கூடியாதல்,
செறிப்பறிவுறுக்கப்பட்டாதல், இரவுக்குறியது ஏதம் காட்டவாதல்,
வரைவுகடாவப்பட்டாதல் தெருண்டு வரைதலும் உரியன்.

      ஈதெல்லாம் களவு வெளிப்படா முன்னுற வரைதல் விகற்பமெனக்
கொள்க.

      இனி, வெளிப்பட்ட பின்றை வரைதல் விகற்பமின்று எனக் கொள்க.
அவற்றுள், களவு வெளிப்படா முன்னுறவரைதல் சிறப்புடைத்து, இது
தனக்காகாமையால் வரைந்தமையிற் சிறப்பின்று எனக் கொள்க. இது களவு
வெளிப்பாடு அன்றென்று மறுத்துக் களவு வெளிப்படா முன்னுற வரைதல்,
அறத்தொடுநிலை நிகழாமுன் வரைதல் என்றவாறு.