பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - கற்பு 179
 

     இனி, ஒரு திறத்தார், தன்னிடத்ததே என்ப; அது சொல்லுதல்
பொருந்தாது;

     1‘மாண்தொழின் மாமணி கறங்கக் கடைகழிந்து’       (அகம்-66)

எனவும்,

    ‘வருகதில் லம்மவெஞ் சேரி சேர’                 (அகம்-276)

எனவும் இவை யெல்லாஞ் சான்றோர் செய்யுளுண்மையான்.

   இனி, நிலத்து நீங்காது எனவே, ஓரூரது என்பது பெறப்பட்டது;
பட்டமையான், தன்னிடத்ததாகவும் பெறும், தன்னிடத்து நீங்கிச் 2சேயதாகவும்
பெறும் என்பது.

   இனி, ஓரிடத்தது 3என்பதனால், தலைமகன் இடம் பெரிதாகலான்,
தலைமகளது இடமும் பரத்தையர் சேரியும் வேறாய் நீங்கி இருக்கும்; அது
தன்னுள்ளே செய்குன்றமும் வாவியும் விளையாட்டிடமும் எல்லாம்
உடைத்தாயிருக்கும் என்பது.                                      (9)


சூத்திரம்-43


      பரத்தையிற் பிரிந்த கிழவோன் மனைவி
      பூப்பின் புறப்பா டீரறு நாளும்
      நீத்தகன் றுறைதல் அறத்தா றன்றே.

    என்பது, என்னுதலிற்றோ எனின், தலைமகன் பரத்தையிற் பிரிந்தவிடத்துத்
தலைமகட்குப் பூப்பு நிகழ்ந்த காலத்துத் தலைமகன் இவ்வாறு ஒழுகும் என்பது
உணர்த்துதல் நுதலிற்று.

    இதன் பொருள்: பரத்தையிற் பிரிந்த கிழவோன் என்பது-
றப்பெண்டிர்மாட்டுப் பிரிந்த தலைமகன் என்றவாறு; மனைவி பூப்பின்
புறப்பாடு ஈரறு நாளும் என்பது-கிழத்தி பூப்புப் புறப்பட்ட நாண்முதற்
பன்னிருநாளும் என்றவான்; நீத்து அகன்று உறைதல் அறத்தாறு அன்றே
என்பது-நீத்தும் அகன்றும் உறைதல் அறநெறியன்று என்றவாறு.

    எனவே, நீயாதும் அகலாதும் உறைதல் அறநெறி என்றவாறாம்; என்பது,
சொற்கேட்கும்வழியும் கூடியும் உறைக என்றவாறு, இவ்வாறு உறைதல்
செயற்பான்மையது என்றவாறு.

   அஃதாமாறு; தலைமகன் பரத்தையிற்பிரிந்த காலத்துத் தலைமகட்குப்
பூப்புத் தோன்றிற்று; தோன்றத், தலைமகன் உணரும். எங்ஙனம் உணருமோ
எனின், வாயில்கள் உணர்த்த உணரும் என்பது. என்னை வாயில்கள்
உணர்த்துமாறு

   1. மான்றேர். 2. சேரியதாகவும். 3. என்பதனை.