| 
     
     என்பது போந்தது. அவ்வாறு பரத்தை தற்புகழ்தற்குச் செய்யுள்:பரத்தை தற்புகழ்தல்
 
 ‘வெஞ்சுடர் நோக்கு நெருஞ்சியில் ஊரனை வெண்முறுவற்
 செஞ்சுடர் வாள்முகத் தாள்முன்னை யென்பால் திரியலனேல்
 அஞ்சுடர் வேலரி கேசரி கோளம னாட்டுடைந்தார்
 தஞ்சுடர் வாட்படை போல உடைகவென் சங்கங்களே.’      (292)
 
 பிறவும் அன்ன கண்டுகொள்க.                                  (14)
 
 சூத்திரம்-48
 
 நாடும் ஊரும் இல்லும் சுட்டித்
 தன்வயின் கிளப்பின் புலவிப் பொருட்டே.
 
 என்பது என்னுதலிற்றோ எனின், தலைமகள் தற்புகழ்ந்தாளாகற்க, இவ்வாறு
 சொல்லியக்கால் 
     அதுவும் புலவிநிமித்தம் என்பது உணர்த்துதல் நுதலிற்று.
 
 இதன் பொருள்: நாடும் ஊரும் இல்லும் சுட்டி என்பது - நாடே
 ஊரே இல்லே இவற்றைக் கருதி என்றவாறு, 
     தன்வயிற் கிளப்பிற்
 புலவிப்பொருட்டே என்பது-தன்கட் சொல்லிற் புலவிப்பொருட்டாம்
 என்றவாறு.
 
 தான் உறையும் நாட்டையும், தன் ஊரையும், தான் பிறந்த
 குடியையும் சொல்லித் தலைமகள் தற்புகழ்ந்தா 
     ளாகற்க; இவ்வாறு
 சொல்லியக்கால், இது புலவிப்பொருட்டாம் என்றவாறு. அஃதாமாறு,
 ‘எம்நாடு’ 
     இறப்பவுஞ் சிறியாராலே வாழப்படுவது’ எனவும்,
 
 ‘குறும்புசூழ் இருக்கை மறந்தலை மணந்து
 சிறுகூழ் வல்சியிற் சில்வரை யிற்றே
 அந்நாட் டுள்ளும் எம்மூ ராமே
 புல்வாய் வலக்கொல் லேசிதர் பற்றி
 வளநனி குறைந்த வாரித் தன்றே
 அவ்வூ ருள்ளும் பிறந்த இல்லம்
 கல்லாச் சிறியோர் 1இல்லம் அன்றே.’
 
 ‘அன்ன சிறியரொழுக்கம் நுமக்குத் தக்கதன்றே! அல்லதூஉம்,
 எம்பெருமாற்கெனின் இறப்பவும் 
     பெருந்தன்மைய அன்றே! அந்நீரார்க்கு
 இவ்வாறு தலையளி பொறுக்குமன்றே’ எனவும்
 
 (பாடம்) 1. உள்ளம்.
 |