யாறு வருகின்றதென்று ஆடை தலைச்சூடாரன்றே என்பது. இனி,
இறந்தகாலத்துத் துணிவுபற்றி நிகழ்ந்த துண்டன்றே, அஃதெல்லாரும் உணரச்
செய்தானாகலானும், அஃது உணர்த்துதற்கு இடம் அன்று, அது செய்திலேன்
என்று சொல்லிவிடின் அது மறைவதன்றாகலான் என்பது. இனி
மறுப்பானாயின், செய்தன மேலுஞ் செம்பூச் சிதறினாற்போலக்
கொடுமையுடைத்தாம். அதுதான் உணர்த்துதற்கு இடனன்றாயிற்று என்பது,
அவ் வூடல் தோன்றுமெனின் என்றவாறு.
எனவே. எந்நேரத்துக்கண்ணே தோன்றுவது எனிற் சொல்லுதும்;
பரத்தையர் சேரியினின்றும் வந்த தோழியை வாயிலாகக் கொண்டான்;
கொள்ளத், தோழி புக்குப் பல காரணமுங் காட்டினாள்; காட்டுவாள், ‘நாம்
இல்லிருந்து 1இறைவழிபட்டு, மக்களை வளர்த்து, விருந்து புறந்தருதலல்லது
போகத்துள்ளாமன்றே, அல்லாதேம் ஊடலும் புலவியும் துனியும்
கொள்ளற்பாலமல்லம்;
அல்லதூஉம், வண்டோரனையர் ஆடவர், பூவோரனையர் மகளிர்
என்பது; என்னை, வண்டுகள் தாதூதுமிடத்து 2நன்மலரே ஊதுவேம்
அல்லாதது ஊதேம் என்னா, எல்லா மலரும் ஊதும்; இனிப், பூவாயினக்கால்,
‘எம்மையே ஊதா எல்லாப் பூவையும் ஊதின’ என்று புலவாதன்றே;
அதுபோலத் தலைமகனும் எல்லாப் பெண்பால்களையும்
தலைப்பெய்தற்றன்மையான்; அத்தன்மை அறிவான் போம்பொழுது
புறந்தொழுது வரும்பொழுது எதிர்தொழுது ஏற்றுக்கொண்டு வழிபடுதலல்லது
மலைத்தற்கண்ணேமல்லம்; மலைத்து இப் பெற்றியமாதல் தலைமையன்று;
அல்லதூஉம், இவ்வாறே வழிபடாதொழிவாமல்லாதாம் நம்பெருமானை
வருத்தி என்செய்தும் என்று ஏற்றுக்கொண்டு வழிபடுவது ‘பொருளேபோலக்
காட்டும்’ என்று இங்ஙனஞ் சொல்ல, ‘அஃதொக்கும்பிற’ என்று
அப்போதைக்குச் சிவப்பு நீங்கிற்று; நீங்கப் ‘புகுதுக’ என்றாள். என, அவன்
புக்கான். புக்குப் பள்ளியிடத்தானாக, உள்ளுடைத்தாகிய சிவப்புத்தோன்றும்
என்பது; தோன்றக் கண்சிவந்து நுதல் வேறுபட்டுக் காட்டினாள்; காட்டப்
பெரிதும் ஆற்றானாயினான்; ஆற்றாத் தன்மையனேயாய் இறந்தகாலத்து
நிகழ்ந்தனவற்றைப்பற்றிப் புலந்து சொல்லும். ‘என்னை, மேலைக்காலத்து நாம்
ஆற்றாமாகத் தான் ஆற்றாளாய் நாம் ஆற்ற ஆற்றிவருகின்ற இவளே,
இற்றையினூங்கு நாம் ஆற்றாமாயது அறியாமையால், இவ்வாற்
1. இறைவழிப்பட்டு. 2. நாண்மலரே. |