பக்கம் எண் :
 
188இறையனார் அகப்பொருள்

றாமை என்னையாற்றிலாமையால் இவள் நங் காதலியல்லள். அவள்
போல்வதோர் தெய்வம்; நீ அவளெனக் கருதினாய் நெஞ்சே, நினது
மடமையால்; நெஞ்சிற்குச் சொல்லும்; அவள் யாராகியாள் என நெஞ்சிற்குச்
சொல்லியதற்குச் செய்யுள்:


தலைமகன் நெஞ்சிற்குரைத்தல்


  ‘இல்லென் றிரவலர்க் கீதல்செய் யாதவன் இல்லமெனப்
  புல்லென்று வாடிப் புலம்பல்நெஞ் சேநமக் கியார்பொருந்தார்
  வில்லொன்று சேர்பொறி வானவன் வாட விழிஞங்கொண்ட
  கொல்லொன்று வாட்படை யான்தமிழ் நாடன்ன கோல்வளையே’

  ‘அரையணங் குந்துகி லாளல்லள் ஆற்றுக் குடியில்வென்ற
  உரையணங் குந்தமிழ் வேந்தன் உசிதனொண் பூம்பொதியில்
  வரையணங் கோஅல்லை யோஎன்ன யான்மம்மர் எய்தஉண்கண்
  நிரையணங் கும்பனி நீர்கொள்ள நின்றஇந் நேரிழையே’       (296)

என்பது, தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லியது. அதுகேட்ட தலைமகள்,
‘மேனாள் யான் செய்த குற்றேவல் உட்கொள்வானாயிற்று, என்கட்
பேரருளினானன்றே, இவ்வகைப் பேரருளினான்திறத்து இவ்வகை சிவத்தல்
தகாது’ என்று சிவப்பு நீங்குவாளாவது.                              (17)


சூத்திரம்-51


      நிலம்பெயர்ந் துறையும் நிலையியல் மருங்கின்
      களவுறை கிளவி தோன்றுவ தாயின்
      திணைநிலைப் பெயர்க்கோள் கிழவற்கும் வரையார்.

என்பது என்னுதலிற்றோ எனின், இன்னுங் கற்புக்காலத்துத் தலைமகற்கு
உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொருள்: நிலம் பெயர்ந்து உறையும் நிலையியல் மருங்கின்
என்பது-நிலம்பெயர்ந்து உறையும் என்பது, உள்ளத்துக்கண் நிலைபெற்றவிடத்து

என்றவாறு; களவுறை கிளவி தோன்றுவது ஆயின் என்பது-களவு
காலத்திற்குரிய சொல் தலைமகள்மாட்டுத் தோன்றுமே எனின் என்றவாறு;
திணைநிலைப் பெயர்க்கோள் கிழவற்கும் வரையார் என்பது-திணைநிலைப்
பெயர்ந்துகொள்ளுங் கோள் தலைமகற்கும் வரையார் என்றவாறு.