பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - கற்பு 189
 

   அஃதாமாறு, தலைமகளை எய்திக் கற்புக்காலத்து ஒழுகா நின்ற
நிலைமைக்கண் நெஞ்சு பொருட்குப் பிரிதும் என்றது என்பது.

    ‘நட்டாரை யாக்குதலும் செற்றாரைச் சிதைத்தலும் பொருட் குறைபாடு
உடையார்க்கு நிகழாவாகலாற் குறைபாடு நீங்கப் பொருட்குப் பிரிதும்’ என்ற
நெஞ்சிற்குத் தலைமகன், ‘நாம் பொருட்குப் பிரிய இவள் ஆற்றுமேற் பிரிதும்,
ஆற்றாளாயின் ஒழிதும்’ என்று நெஞ்சினோடும் ஒருப்பட்டுத்
தலைமகளுழைப்புக்கான்; புக்குப் பள்ளியிடத்தானாகிப் பெரியதோர்
அருளிச்செய்கை செய்தான்; செய்யத் தலைமகள், ‘எம்பெருமான் பண்டும்
அருளிச்செய்கை செய்தான்மன், இவை பண்டே போலாது, பெரிதும்
1இழுமத்தக்கனபோலக் காட்டின, பிரியக் கருதினான் கவடு போலும்’ “மற்று
நின்னிற்பிரியேன் பிரியின் ஆற்றேன்’’ என்று சொல்லும்சொல்
பொய்ப்பட்டதாம்’ என, பொய் என்றும் ஒழுக்கம் குறைபாடாமது பிறவென
என்று ஆற்றாளாயினாள். அவ்வாற்றாத்தன்மை தலைமகற்குப்
புலனாயிற்றாகலான், ‘இவள் குறிப்பினானே பிரிவுணர்ந்து ஆற்றாளாயினாள்,
பிரியின் இறந்துபடும்’ என்று தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லியதற்குச்
செய்யுள்:


நெஞ்சிற்குரைத்தல்


   ‘துளியும் துறந்தவெங் கானஞ் செலவின்று சொல்லுதுமேல்

   ஒளியுந் திருநுதல் வாடியுய் யாள்கொல் உசிதனென்ற
   தெளியுஞ் சுடரொளி வாள்மன்னன் செங்கோல் எனச்சிறந்த
   அளியும் பொறாதுநெஞ் சேநைய நின்றஇவ் வாயிழையே.’     (297)

      இவ் வண்ணம் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியதற்குச் செய்யுள்:
தலைமகன் செலவழுங்கல்

   ‘மையார் தடங்கண் வரும்பனி சோர வருந்திநின்றிந்

   நெய்யார் குழலாள்இனைய நறையாற்று நின்றுவென்ற
   கையார் கொடுஞ்சிலைச் செங்கோற் கலிமதன் காய்கலிக்கு

   வெய்யான் பகையென நீங்குது மோநெஞ்சம் வெஞ்சுரமே.’    (298)

   ‘செருமால் கடற்படைச் சேரலர் கோன்நறை யாற்றழியப்
   பொருமால் சிலைதொட்ட பூழியன் மாறன் பொருமுனைபோல்
   அருமா நெறிபொருட் கோசெல்வ தன்றுநெஞ் சேயவள்தன்
   பெருமா மழைக்கண்ணும் நித்திலம் தந்தன பேதுறவே.’       (299)

இவ்வாறும் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கும்.

   1. இழித்தக்கன.