| 
        
             அஃதாமாறு, மேல் அவ்வகையாற் பிரிவெடுத்துக்கொண்டுஆற்றுவித்தார், ஆற்றல் கண்டு பிரிந்தவழித் தோழி தலைமகளை
 ஆற்றுவித்துக்கொண்டு இருந்தாளன்றே; இருந்தவிடத்துத் தலைமகனும் தான்
 எடுத்துக்கொண்ட வினை முடித்தானன்றே; முடித்தவழியாற் குறித்தகாலம்
 வந்தது என்று, மறுத்துஞ் சார்ந்தானன்றே; சார்ந்த இடத்துச் 1சங்கம் 
        படகம்
 வந்து இசைத்தன. இசைப்பத், தோழி தலைமகனது வரவுணர்ந்து,
 ‘எம்பெருமாட்டி, நீ இறந்துபடுவான் புக்காயால், கண்டாயன்றே, உள்ளாரால்
 எய்தப்படாத பொருளில்லை, நீ ஆற்றியுள்ளாயாகின்றே இன்றும்
 எம்பெருமானை வழிபடுவாயாயினாயாயிற்று’ என இவ்வாறு சொல்லுதல்,
 ‘சிறைப்புறங் குறியா தோன்றலு முளவே’ என்பது.
 
 2சங்க படகம் இசைப்பச் சங்கினை 
        வாழ்த்திச் சொல்லியதற்குச் செய்யுள்:
 
        
        சங்கினை வாழ்த்தல்
 
        
        ‘தேனிற வார்கண்ணிச் செம்பியன் மாறன் செழுங்குமரி
 வானிற வெண்திரை மால்கடல் தோன்றினை மண்ணளந்த
 நீனிற வண்ணனும் ஏந்தினன் தம்முன் நிறம்புரைதீம்
 பானிற வெண்சங்கம் யார்நின்னின் மிக்க படிமையரே.’       
        (314)
 
 ‘புரிவளை வான்கோடு புத்தேளோ டொத்தி
 திருவமர் மார்பனு மேந்தினன் தம்முன்
 உருவம் புரையும்நின் கேழ்’
 என்பதூஉங் கொள்க.                              
        (22)
 
        
        சூத்திரம்-56
 
        
        திணையே கைகோள் கூற்றே கேட்போர்
 இடனே காலம் எச்சம் மெய்ப்பாடு
 பயனே கோளென் றாங்கப் பத்தே
 அகனைந் திணையும் உரைத்தல் ஆறே.
 
 என்பது என்னுதலிற்றோ எனின், மேற் களவும் கற்பும் உணர்த்தினார், இனி
 அவ்விரண்டும்பற்றி வருகின்ற பாட்டினை இக்கூறப்பட்ட பத்திலக்கணத்தானும்
 உரைக்க என்பது உணர்த்துதல் நுதலிற்று.
 
 1. சங்கு படகம். 2. சங்கம் படகம்.
 |