பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - களவு 47
 

     ‘கையேர் சிலைமன்ன ரோடக் கடையற்றன் கண்சிவந்து
     நெய்யே ரயில்கொண்ட நேரியன் கொல்லி நெடும்பொழில்வாய்
     மையேர் தடங்கண் மடந்தைமெல் லாகம் புணர்ந்ததெல்லாம்
     பொய்யே யினிமெய்ம்மை யாயினு மில்லைப் புணர்திறமே
’ (19)

என, இவ்வகையான் அவளது அருமை நினைந்து இவ்வொழுக்கம்
கைகூடாதென்று கருதுவானாயின் வரையும்; யான் இவ்வகையாளைப்
புணருமாறு என்னைகொல்லோ என்பானாயின் கூட்டத்திற்கே முயல்வானாம்.
அவ்வகை நினைந்து நீங்குவான் ஆயத்தோடுஞ் செல்லாநின்ற தலைமகளை
நோக்கிச் சொல்லும்; அதற்குச் செய்யுள்:

     ‘தேயத் தவருயி ரைப்புல னன்றென்பர் செந்நிலத்தைக்
     காயக் கனன்றெதிர்ந் தார்மரு மத்துக் கடுங்கணைகள்
     பாயச் சிலைதொட்ட பஞ்சவன் வஞ்சிப்பைம் பூம்பொழில்வாய்  
     ஆயத் திடையிது வோதிரி கின்றதென் ஆருயிரே
’         (20)

     ‘
இன்னுயிர் கண்டறி வாரில்லை யென்ப ரிகல்மலைந்தார்
     மன்னுயிர் வான்சென் றடையக் கடையலுள் வென்றுவையந்
     தன்னுயிர் போல்நின்று தாங்குமெங் கோன்கொல்லித்
                தாழ்பொழில்வாய்
     என்னுயி ராயத் திடையிது வோநின் றியங்குவதே
’         (21)

என, இவ்வாறு சொல்லி, இனி இவளைக் கைகூடாதென ஆற்றானாயினான்.
அவ்வாற்றாத்தன்மை ஆற்றுவது ஒன்றனைப் பற்றும். ஆற்றுவது யாதோ
எனின், தான் எய்திய ஆரணங்காகிய அவ்வுருவினை நினைந்து, தான்
எய்தும் உபாயமாவது தன் காதற்றோழனை இதுகொண்டு முடிக்குங்
கொல்லோ என்பது. அது பற்றுக்கோடாக ஆற்றி நீங்கும் என்பது.     (2)
 

                        சூத்திரம் - 3

    ஆங்ஙனம் புணர்ந்த கிழவோன் தன்வயின்
    பாங்க னோரிற் குறிதலைப் பெய்தலும்
    பாங்கிலன் தமியோள் இடந்தலைப் படலுமென்று
    ஆங்க இரண்டே தலைப்பெயல் மரபே.


என்னுதலிற்றோ எனின், இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த தலைமகன்

அதன்பின்னே தெருண்டு வரைதல் தலை; என்னை, வழிப்போகாநின்றான்
ஒருவன் பிழைத்துச் சேறானும் சரணகமானும் மிதித்தவிடத்துக்
காலைக்கழீஇப் பாதுகாத்துத் தன் இல்லம் புக்கதுபோல,
அவனும்ஞானவொழுக்கக் குணங்களின்