பக்கம் எண் :
 
92இறையனார் அகப்பொருள்

என, ஆற்றானாயினான்; ஆற்றானாய், ‘நீயிர் பெரியீர், யாம் சிறியேம்’
என்பதன்றே சொல்லியது; யானும் அத்தன்மையேனாக எய்தலாமன்றே என்று
ஆற்றும் என்பது;

   இனி, இவ்வாறும் சொல்லும்; அதற்குச் செய்யுள்:

 
 ‘நீடுநீர்க் கானல் நெருநலு நித்திலங்கொண் டையவந்தீர்
   கோடுயர் வெண்மணற் கொற்கையம் மூரிவற்றாற் குறைவிலம்யாம்
   ஆடும் கழங்கும் அணிவிளங்கும் அம்மனையும் பிறவுமெல்லாம்
   பாடிய வைப்பன வும்1பந்தர்ப் படுவனவும் பனிநீர்முத்தம்.’

   ‘முன்னைத்தஞ் சிற்றில் முழங்குகட லோதம் 2மூழ்கிப்பெயர
   அன்னைக் குரைப்பன் அறிவாய்கட லேயென் றலறிப்பேருந்
   தன்மை மடவார் தணந்துகுத்த வெண்முத்தந் தகைசூழ்கானற்
   புன்னையரும்பேய்ப்பப்போவாரைப் பேதுறுக்கும் புகாரேயெம்மூர்.’

   இன்னும், ‘அன்னபிறவும்’ என்றதனானே தழீஇக்கொளப்
படுவனவற்றிற்குச் செய்யுள்:

                     
தழையெதிர்தல்

   ‘வேழம் வினவுதிர் மென்பூந் தழையும் கொணர்ந்துநிற்றிர்
   ஆழ முடைய கருமத்திர் போறிர் அணைந்தகலீர்
   சோழன் சுடர்முடி வானவன் தென்னன்துன் னாதமன்னர்
   4தாழ மழையுரு மேந்திய கோன்கொல்லித் தண்புனத்தே.’  (120)


   ‘பாவுற்ற தீந்தமிழ் வேந்தன் பராங்குசன் பாழிப்பற்றாக்
   கோவுற்ற வல்லல்கண் டான்கொல்லிச் சாரலெங் கொய்புனத்துள்
   ஏவுற்ற புண்ணொடு மான்வந்த தோவென்னும் ஈர்ஞ்சிலம்பா
   மாவுற்ற புண்ணிற் கிடுமருந் தேநின்கை வார்தழையே.’     (121)


   ‘வேனக நீண்டகண் ணாளும் விரும்புஞ் சுரும்பரற்றத்
   தேனக நீண்டவண் டார்கண்ணி யாய்சிறி துண்டுதெவ்வர்
   வானகம் ஏறவல் லத்துவென் றான்கொல்லி மால்வரைவாய்க்
   கானக வாழ்நருங் கண்டறி வாரிக் கமழ்தழையே.’         (122)

   ‘துடியார் இடைவடி வேற்கண் மடந்தைதன் சொல்லறிந்தால்
   கடியார் கமழ்கண்ணி யாய்கொள்வல் யான்களத் தூரில்வென்ற
   வடியார் இலங்கிலை வேல்மன்னன் வானே றணிந்தவென்றிக்
   கொடியான் மழைவளர் கொல்லியஞ் சாரலிக் கொய்தழையே.’ ()

   ‘அங்கேழ் மலர்நறுங் கண்ணியி னாயரு ளித்தரினும்
   எங்கே ழவருக் கியைவன போல இருஞ்சிறைவாய்
   வெங்கேழ் அயில்நலங் கொண்டவன் விண்தோய்     
                                 பொதியிலின்வாய்ச்
   செங்கேழ் மலரத் தளிரிளம் பிண்டியின் தீந்தழையே.’     (124)

(பாடம்) 1. பந்தாடல். 2. மூழ்கிப்போகக். 3. தயங்குகானற்.
       4. தாழுமறையரு.