யொழியுமென்றாலிது முத்தொகையா யுரைப்ப வெடுத்த பொருளிலடங்காமையால் வழுவெனக் கொள்க. பிறவுமன்ன. அன்றியும், பதிகத்துரிமை வேண்டும். இஃதுபொருட்குரிமையும் அளவிற்குரிமையும் எனவிருவகைப்படும். இவற்றுட் பொருட்குரிமையாவது:- தான்விரித்துரைக்க வெடுத்த பொருட்கன்றியே மற்றொரு பொருட்கேலாதாம்படி சிறப்பினை யுடைய பதிகங் கூற லதன்பொருட்குரிமை யெனப்படும். இதனைப்பற்றி முன்னோர் பதிகமே நூன்முக மென்றார். என்னையோவெனில், அணியுடை முதலிய பலர்க்குப் பொதுமையவாகச் செய்யினும் இருவர்க் கேற்கும் பொதுமுகச் சாயற்காண்ப தரிது. அளவிற்குரிமையாவது:- எலியுடற்கி யானைத் தலையும் யானையுடற் கெலித்தலையு மேலாதனபோற் பொருளை விரித்தவளவிற் கதன்முகமாகிய பதிகவளவுந் தகுவதாத லளவிற்குரிமை யெனப்படும். ஆயினும் பதிகவுறுப்பின் மிக்க நெடுமையிற் குறுமை நன்றெனக் கொள்க. இதற்கெலா முதாரணமாம்படி திருவள்ளுவநாயனார் பயனென் றெடுத்துத் தேற்றப் பொருள்வகைக் கியற்றமிழாய் விரித்து ரைப்பப்பதிகமாவது வேதநூன்முத லெவ்வகைநூலுங் கல்லாதுணரவுஞ் சொல்லாதுணர்த்தவும் வல்லவராகி, மெய்ஞ்ஞானத் திருக்கடலாகியவொ ருமெய்க்கடவு டன்றிருவடிமலரே தலைக்கணி யெனக் கொண்டேத்தி, யிருளிராவிடத்து விளங்கிய வொருமீன் போலவும் பாலைச்சுரத்தரி தலர்ந்த பதுமம்போலவு மெய்யாஞ்சுருதி விளக்காதிருளே மொய்த்த நாட்டின் கண்ணுங் கடவு ளேற்றிய ஞானத்திருவிளக் கெறிப்பத் தெளிந் துணர்ந் தெங்குமொரு விளக்கென நின்றுயர்ந்த திருவள்ளுவருரைத்த பலவற்றொன்றை நான்றெரிந்துரைப்பத் துணிந்தேன். அந்நாயனார் தந்த பயனெனும் பெருங்கடலாழத்தின் மூழ்கி யாங்குடையரு மணியொருங் கெடுத்தொரு சிறு செப்பினடைத்தாற் போலத் திருவள்ளுவரது பயனெலாம் விரித்துப் பகரும்படி நான்வல்ல னல்லேனாகையி னக்கடற்றுறை சேர்ந்தொருமணி யெத்துக் காட்டலுணர்ந்தேன். அவர் சொன்ன குறளி னொன்றே யிங்ஙன நான் விரித்துரைப்பத் துணிந்தேன். அஃதாவது:- "மனத்துக்கண் மாசிலானாத லனைத்தற னாகுல நீரபிற." எ-து. இல்லறந் துறவறமென்றிவ் விரண்டனுள்ளு மடங்கி நிற்கு மெல்லா வறங்களு மனத்தின் றூய்மையாற் பெறும் பெருமையே தருமமெனவும், மனத்தினுண் மாசுகொண்டவன் செய்யுந்தவமுந்தானமு மற்றையாவு மறத்தினரவமாவ தன்றி யறத்தின்பயனுள வல்லவெனவு, மக்குறளிருபய னிவையென விரித்துக் காட்டுதும். விரிப்பவே மெய்யும் பொய்யும் விளக்கி யுட்பயன்றரு மெய்யறத்தின் றன்மையே வெளியா யிஃதொன்றுணர்ந்து நாமதற்கொப்ப நடந்தாலிது வீடெய்தும் வழியெனக் காணப்படும். பெரும்பொருணேர்ந்து பொய்ம்மணி கொள்வது கேடென்றாயினும் பொருளைநேர்ந்து முடலை வாட்டியு முயிரை வருத்தியு மேற்கதிவீட்டிற் செல்லாச் சில பொய்யறங்களை யீட்டுவதிலுங் கேடாமன்றோ. இதனை விலகித் தன்னுயிராக்கங் காப்பது |
|
|