சில மற்றொரு பொருட்குரியவாகையிற் றான்விரித்துரைப்பவெடுத்த பொருட் கேற்பவற்றைத் தெரிந்து போர்முகத்தணிகளைப் பலவகையூகமாகவகுத்ததுபோலக் குறித்தபயனையடைதற்கேற்ற வொழுங்குந் தெளிவு மாம்படித் தெரிந்தநியாயங்களைப் பகுத்தபின்னரேற்றிய சுவர்மேற்சித்திர மெழுதுவார்போலவு மெழுதிச்சுருட்டின படத்தைவிரிப்பார்போலவு முறையிற்கிடந்த நெடும்வாளுருவி வீசுவார்போலவுந் தானுமவற்றைத் தனித்தனி விரித்துக்காட்டல்வேண்டும். இதுவேவிரிவெனப்படும். இதற்கைந் தாமதிகாரத்திற் சொல்லப்படு மலங்காரங்களே வழியாம். உதாரணங்காட்ட விதியே விளங்கும். ஆகையிற் பதிகத்துதாரணமாக வெடுத்த குறளுண் முதற்பயனாகிய மனத்தின் றூய்மையா லறமெலாம் பெறும் பெருமையு முடையன வென்பது பல வகத்திணையால் விரித்து விளக்கியவாறு. அறமென்னப்பட்ட யாவுமன் னுயிர்க்கோ ருயிராகவு மனத்திற் கோரணி யாகவு நெஞ்சத்திற் கொரு செல்வமாகவும் வழங்குமியல்பினை யுடையன வாகையிற் புறத்துத் தோன்றும் வேற்றுருக் கோலங் காட்டி யகத்து ண்ணுழையாவறமோ வறத்தின்பேறும் பெருமையுமுடைய வென்பர். எப்பொருளினு மதனுண்மை யுணர்தலே ஞானம். உணர்ந்த பொருளினி வையே நல்லவை யெனவு மிவையே யல்லவை யெனவுந் தெளிதலே காட்சி. தெளிந்தவழியேயல்லவை யொருவிநல்லவை மருவியொழுகலே யொழுக்கம். இந்நல்லொழுக்கமே யனைத்தறனாகையி லிவையெலா மன முயற்சியா லாகவேண்டுழி, மனமொவ்வா வறனெல்லாம் பொய்யென விகழப்படுவது முறையே யென்பது. இவையுமித் தொடக்கத்தனபலவு மியல்பகத்திணையாம். அன்றியும் பிறர்நோய்கண் டகத்திரங்கா னையோவென வாய்பொய்த்த விரக்கங்காட்டல் தயையோ. நெஞ்சங்கடுத்த சுடும்பகை கொண்டான் முகநகநட்பதுநட்போ. ஒன்றீந்தொருபத்தடித்துக் கொள்ளத்துணிந்தான் பிறர்க்கீந்துதவுதல் கொடையோ, மனைநகர்நாடுமகல நீக்கியுட்பொருளின்ப மணுகுமாசைநீங்கான் மறுதுணையில்லா வனம்புக்குறைதல் துறவோ. பிணியுறப் பசிமிகப் பகைப்பட மொய்த்ததுன்பமின்ப மென வுணர்ந் தகங்கலங்காதான் புறத்தும் புறம்பாதிருப்பது பொறையே. பிறரழகாசை மனம்புகாத் தன்னிறைகாத்த மகளீர்புறத்துக் காட்டுமொடுக் கமுங்கற்பே. தன்மனக்கோட்டங்கண்டு நாணுதல் நாணமே. மனத்திலிறைஞ்சிப் பிறரைப் பணிவான் புறத்துப் பொய்யாச் சொல்லின் வணக்கமும் பணிவே. உளத்திற்கலங்கா தெதிர்வெம்போர் முகத்தஞ்சான்றுணி வாய சேவகந்தானும் வீரமே. இவ்வாறனைத் தறன்மனத்துக் கண்மாசில னாதலாகுமன்றோ என்பதிவையு மித்தொடக்கத்தனபலவும் வகையகத்திணையாம். அன்றியும் உள்ளொவ்வாமற் புறத்துத்தோன்றுஞ் சித்திரவற த்தின்சாயலும் பயன்றருநல்லறமெனப்படுமாயின், நான்கொண்டாட்டிய புன்மரப்பாவையுங் களிகொண்டாடிய கருங்கட்பாவையும் வேறுபாடின்றி யொக்குமெனவும், கண்ணே கனியவழகு காட்டியுள் ளுயிர்கொல்லு நஞ்சு |
|
|