யோய்.' என வவனுரைப்பா னெடுத்த பொருளை மேலேதொகுத்துக் காட்டினபின்னரீங்கே பிரித்து வகுத்தவாறு காண்க. இனியப்பிரி வொன்றொன்றாய்ப் பலதிணைவகையா லுரைப்பது கண்டுகொள்க. - "விண்டுவேய் நரலூ ன்விழைகான வரிடமுங், கொண்டுகூர் பனிகுலைத் திடுநிலைக் களக்குறும்பு, முண்டுநீ ரெனவுரை யினுமரியன வொருவி, மண்டுதீம் புனல்வளங் கெழுநா டெய்தலரிதே." 141. முதற்பலவும் வகையகத்திணையா னற்பிறப்பெய்தி நல் லுடலெய்து மருமையைக் காட்டினவாறு. - "இன்னதன்மையி னருமையி னெய்திய பொழுதே, பொன்னும் வெள்ளியும் புணர்ந்தெனவயிற்றகம்பொருந்தி, மின்னுமொக்குளு மென்நனி வீயினும் வீயும், பின்னைவெண்ணெ யிற்றிரண்டபின பிழைக்கவும்பெறுமே." 149-என்பதாதி யேழுமுரைத் தபின். - "தேங்கொள்பூங்கண்ணித் திருமுடித்திலகவெண் குடையோ, யீங் கிதன்றியு மிமையவர்மையலாக்கடந்த, தாங்குமா வண்கைச்சக்கரமிக்குயர் பிறரும், யாங்கணாரவரூரொடு பெயரெமக் குரையாய்." என வெட்டுச் செய்யுளானும் வகையகத்திணையானு மத்தாட்சியுவமையகத்திணையானு முடனில்லாமைக்காட்டினது. - "வெவ்வினைசெய்யு மாந்தருயிரெனு நிலத்தில் வித்தி, யவ்வினை விளைவுளுண்ணுமவ் விடத்தாவதுன்ப, மிவ்வெனக்கி ளத்து மென்றுநினப்பினும் பிணிக்குமுள்ளஞ், செவ்விதிற்சிறிது கூறக் கேண்மதிசெல்வவேந்தே." 154 - முதலாக 188 - ஈறாகப் பாவத்தானரகத்தில் விளையுந் துன்பங்களைக் கண்முன்வைத்தாற்போலச் சித்திரமுதற்பல வலங்காரவகையானும் பலதிணைவகையானும் விழுமியபொருளாயுரைத் தவாறுகாண்க. அங்ஙனமெடுத்த மற்றவற்றையு மியல்புவமைபுறநிலை முதலியதிணைகளால் விரித்தவாறு கண்டுகொள்க. எ-று. | நான்காவது:தொகையுந்துணிவும். 4. Summary and Conviction | 163. | ஒருங்கு முன்விரித் துரைத்தவை மீண்டு சுருங்கக் காட்ட றொகை யென்றாகும். | | (இ-ள்.) நிறுத்த முறையானே தொகையாமா றுணர்த்துதும். தன் பொருடோன்றப் பலகாரணவகையால் விரித்தவற்றை யீற்றின்கண்ணொ ருங்குடன் றொகுத்துக்காட்டல் தொகைவழி யெனப்படும். ஆகையிற்பி ரிந்த படையணிகூட்டிப் பகையைத்தாக்குவார் போலவும், கணையேதைத் துள்ளுருவக் கூர்முனைகூட்டுவார்போலவு, மேற்றின கோபுரமழகுபெற மேற்சிகரம் பொருத்துவார் போலவும், பூங்காவனத்திற் பிரிந்து பூத்த பன்மல ரொரு செண்டாகத் தொடுப்பவர் போலவும், தானுநினைத்த பயனையடை தற்பொருட்டுப் பலதிணைவகையால் விரித்துக்காட்டிய நியாயங்களொருப் |
|
|