சதகம்:- அகப்பொரு ளொன்றன் மேலாதல் புறப்பொரு ளொன் றன் மேலாதல் கற்பித்து நூறு செய்யுட் கூறுவது. | செவியறிவுறூஉ:- பொங்குத லின்றிப் புரையோர் நாப்பணவிதல் கடனென வவையடக் கியற் பொருளுற வெண்பா முதலு மாசிரிய மிறு தியுமாகக் கூறுவது. | பவனிக்காதல்:- உலாக்காட்சியா லெய்திய காமமிக்கா லவை பிற ரொடு முரைத்து வருந்துவது. | குறத்திப்பாட்டு:- தலைவன் பவனி வரவு, மகளிர் காமுநுதல் மோகினி வரவு, உலாப்போந்த தலைவனைக் கண்டு மயங்கல், திங்கள் தென்றன் முதலியவுவாலம்பனம் பாங்கியுற்ற தென்னென வினவல், தலைவி பாங்கியோ டுற்றது கூறல், பாங்கி தலைவனைப் பழித்துக் கூறல், தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறல், தலைவி பாங்கியைத் தூது வேண்டல், தலைவி பாங்கியொடு தலைவனடையாளங் கூறல், குறத்திவரவு, தலைவி குறத்தியை மலைவள முதலிய வினவல், குறத்தி மலைவள நாட்டுவள முதலிய கூறல், தலைவன் றலவளங் கிளைவள முதலிய கூறல், குறி சொல்லி வந்தமை கூறல், தலைவி குறி வினவல், குறத்தி தெய்வம் பராவல், குறி தேர்ந்து நல்வரவு கூறல், தலைவி பரிசிலுதவி விடுத்தல், குறவன் வரவு புள்வரவு கூறல், கண்ணி குத்தல், புட்படுத்தல், குறத்தியைக் காமுற்றுத் தேடல், குறவன் பாங்கனொடு குறத்தி யடையாளங் கூறல், குறவன் குறத்தியைக் கண்ணுறல், குறவனணி முதலிய கண்டையுற்று வினவலு மாண்டாண்டு குறத்தி விடை கூறலுமாகக் கூறல், பெரும்பான்மையு மிவ்வகை யுறுப்புக்களால் அகவல் - வெண்பா - தரவு - கொச்சகம் - கலித்துறை - கழிநெடில் விருத்தம் - கலி விருத்தம் - இச்செய்யு ளிடைக்கிடை கூறிச் சிந்து முதலிய நாடகத் தமிழாற் பாடுவது. | உழத்திப் பாட்டு:- கடவுள் வணக்க முறையே மூத்த பள்ளி யிளையபள்ளி குடும்பன் வரவோ டவன்பெருமை கூறல், முறையே யவர் வரலாறு, நாட்டுவளன், குயிற்கூக்கேட்டல், மழை வேண்டிக் கடவுட் பரவல், மழைக்குறியோர்தல், ஆற்றின்வரவு, அதன் சிறப்புக் காண்டல், இவற்றிற் கிடையிடை யகப்பொருட் டுறையுங் கூறிப் பண்ணைத் தலைவன் வரவு, பள்ளிக ளிருவர் முறையீடு, இளையாளை யவனுரப்பல், பள்ளன் வெளிப்படல், பண்ணைச் செயல் வினவல், அவனது கூறல், ஆயரை வருவித்தல், அவர் வரவல், அவர் பெருமை கூறல், மூத்த பள்ளி முறையீடு, குடும்பன் கிடையி லிருந்தான்போல வரல், அவனைத் தொழுவின் மாட்டல், அவன் புலம்பல், மூத்த பள்ளி யடிசிற்கொடுவரல், அவனவ ளொடு கூறல், அவனவளை மன்னித்தல் கேட்க வேண்டல், அவண் மறுத்தல், அவன் சூளுறல், அவளவனை மீட்கவேண்டிப் பண்ணித்தலைவனைப் பரவல், விதை முதலிய வளங்கூறல், உழவருழல், காளை வெருளல் |
|
|