மின்றி யிருவருந் தனியிடத் தெதிர்ப்பட்டுத் தாமே கூடுவது காந்தருவ மணம். பெண்ணுக்குப் பொன்பூட்டிச் சுற்றத்தார்க்குப் பொன் வேண்டு வன கொடுத்துக் கொள்வ தசுரமணம். பெண்ணும் பெண்ணினத்தாரு முடன்படாமல் வலிதிற் கொள்வ திராக்கத மணம். துயின்றாண்மாட்டுச் சென்று கூடுவது பைசாச மணம். எழுத்துஞ் சொல்லு மாவன:- தத்தமதி காரத்துட்காண்க. செந்துறை மார்க்கமும், வெண்டுறை மார்க்கமுமாவன:- நாற்பெரும் பண்ணு மேழெழுத்தினுந் தோற்றி னின்னிசைச் செந்துறையாகும். ஒன்பதின்மேற் பதினொன்று மென்பன வெல்லாம் வெண்டுறையாகும். தந்திரயுத்தியாவது:- நன்னூல்.- "நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி, யேற்புழி யறிந்திதற் கிவ்வகை யாமெனத் தகும்வகை செலுத்துத றந்திரவுத்தி." தருக்கமாவது:- நியாய சூடாமணி, புதியநுட்ப முதலான வற்றுட் கண்டு கொள்க. - வீரசோழியம். - "ஏறிய மாலை மாற்றே சக்கர மினத்தா லெழுத்தாற், கூறிய பாட்டு வினாவுத்தர மேக பாத மன்றித், தேறிய காதை காப்புச் சுழிகுளஞ் சித்திரக்கா, வீறியல் கோமூத் திரியும் பிறவும் விரித்துரையே." இவை மேற்கோள். இனி மற்றைச் சித்திரக்கவி களை 364-ஞ் சூத்திரத்தில் விரிவாக வுரையிற் கூறுகின்றாம். அன்றியும், பலபாட்டாக வந்து மேற்காட்டிய தொகைநிலைச் செய்யுளுமன்றி யொரு பாட்டாக வரினும் பலதொடையாகத் தொடுத்து நடக்குஞ் செய்யு ளெல்லாம் வித்தாரக்கவியென வழங்கும். இவையே யகலக்கவியெனினு மொக்கும். ஆகையாற் பெருங்காப்பிய முதலியவன்றி யுலாமுதலாயின வித்தாரக் கவியெனக் கண்டுணர்க. - பிங்கலம். - "கவியே கமகன் வாதி வாக்கி யென், றிவை யொரு நான்கும் புலமைக் கியல்பே. - அவைதாம், ஆசு மதுரஞ் சித்திர வித்தார மென்ப,பாவகைப் பாடுவோன் கவியெனப்படுமே. - ஞாபகஞ் செம்பொரு ணடையினெப் பொருளுங், காசின் றுரைப்போன் கமக னாகும். - ஏதுவு மேற்கோளு மெடுத்துக் காட்டித், தன்கோணிறீஇப் பிறன்கோண் மறுப்போன், மன்பதை வதிகத வாதி யாகும். - அறம் பொரு ளின்பம் வீடெனுந் திறங்கள், கேட்போர் வேட்ப வினியன கூறு, மாற்ற லுடையான் வாக்கி யாகும். - அவற்றுள், கொடுத்த பொருளிற் றொடுத்த வினத்தி, லடுத்த பொருளிற் பாடுவ தாசுகவி. - பொருளின் பொலிவுஞ் சொல்லின் றிறனாலுந், தொடையுந் தொடைக்கண் விகற்பமுந்துதைந்து, முருவக முதலா வலங்கா ரங்க, ளுடன்கொண் டோசை பொலிவுடைத் தாகி, யுய்த்துணர் வோர்கடம் முள்ளங் கட்கு, மாகட லமுதம் போல் பாடுவோன் மதுரகவி. - மாலை மாற்றே சக்கரஞ் சுழிகுள, மேக பாத மெழுகூற் றிருக்கை, காதை காப்பே கரந்துறைப் பாட்டே, தூசங் கொளலே லாவல நாற்றே, பாத மயக்கே பாவின் புணர்ப்பே, கூட சதுக்கங் கோமூத் திரியே, யோரெழுத் தினத்தா லுயர்ந்த பாட்டே, யொற்றுப் பெயர்த்த லொருபொருட் பாட்டே, சித்திரப் பாவே விசித்திரப் பாவே, விகற்ப நடையே வினாவுத் தரமே, சருப்பதோ பத்திரஞ் சார்ந்த வெழுத்தும், வருக்கமு மற்றும் வடநூற் கடலு, |
|
|