பயன்கொலோ-கூர்நுனை வேல், வண்டிருக்குந் தக்கத்தார் வாமன் வழுதியாற், கொண்டிருக்கப் பெற்ற குணம்." இது மெய் வாழ்த்து. "பண்டு மொருகாற்றன் பைந்தொடியைக் கோட்பட்டு, வெண்கடம் வில்லேற்றிக் கொண்டுழந்தான் - றெண்களந்தைப், பூமான் றிருமகளுக் கின்னும் புலம்புமால், வாமான்றேர் வைகையார் கோன்." இது இருபுற வாழ்த்து. வசையாவது:- மெய்வசையும் இருபுறவசையுமாம். மெய்வசையாவது:- வெண்பா - "தந்தை யிலைச்சு மடன்றாய் தொழிலிதான் பார்ப்பா, னெந்தைக் கிதெங்ஙனம் பட்டதுகொல் - முந்தை, யவியுணவி னார் தெரியின் யாவர் தாங்கொல்லோ, கவிகண் ணனார்தம் பிறப்பு." இது மெய்வசை. இரு புறவசையாவது:- வெண்பா. - "படையொடு போகாது நின்றெரிந்தா னென்றங், கொடையொடு நல்லார்கட் டாழ்ந்தான் - படை யொடு, வாடி வழங்குந் தெருவெல்லாந் தான்சென்று, கோடி வழங்கு மகன்." - இது இருபுறவசை. கவி - கமகன் - வாதி - வாக்கி - இந்நால்வர்தன்மையாவது:- ஆசுகவியும் - மதுரக்கவியும் - சித்திரக்கவியும் - வித்தாரக்கவியும் - என வமையும். பாடுதன்மரபாவது:- இலக்கணமுறை பிறழாது பாடுதல். தாரணைப் பகுதி யாவது:- சதுரங்க தாரணை யோடும் பாடுதலாம். ஆனந்தமாவது:- ஆனந்தம் பயக்கச் செய்யுள் சொல்வது. செய்யுளாவன:- தனி நிலைச்செய்யுள், தொடர் நிலைச்செய்யுளென விரண்டாம். விளம்பின தியற்கையாவது:- சூத்திரம். "விளம்பின தியற்கை விரிக்குங் காலை, யாரியத் தமிழினொடு தெரிகிடைக்கி, னுலகின் றோற்றமு மூழி னிறுதியு, மலகிற் றொண் ணூறறுவா றியற்கையும், வேத நாலும் வேதிய ரொழுக்கமு, மாதி காலத் தரசு செயற்கையு, மப்பா நாட்டா ரறியும் வகையா, லாடியும் பாடியு மைவாக் கிளர்த்தல்." நரம்பாவன:- சூத்திரம். - "குரலே துத்தங் கைக்கிளை யுழையுளி, விளரி தார மெனவெழு நரம்பே." பண்ணாவன:- பாலையாழ், சூறிஞ்சியாழ், மருதயாழ், செவ்வழியாழ், என நான்காம். திறனாவன:- அராகம், நோதிறம், வறட்டு, குறுங்கலி, என நான்காம். பாலையாவன:- செம் பாலை, மடுமலைப் பாலை, செவ்வழிப் பாலை, உரும்பாலை, கொடிப்பாலை, இனப்பாலை, விளரிப்பாலை, என வேழாம். கூடமாவன:- எழுவகை யகத்திற்கண்டுகொள்க. திணையாவன:- அகமே - யகப்புறமே - புறமே - புறப்புறமே - என நான்காம். இருதுவாவன:- கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளைவேனில், முதுவேனில், என வாறுமாம். காலமாவன:- இறப்பு - எதிர்வு - நிகழ்வு - என மூன்றாம். மணமெட்டாவன:- பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம். இவற்றுள்:- பிரமசாரிக்குக் கன்னியைத் தீமுன்னர்க் கொடுப்பது பிரம மணம். தலைமக னினத்தார் வேண்டத் தலைமக ளினத்தா ருட்பட் டவளைத் தீமுன்னர்க் கொடுப்பது பிரசாபத்திய மணம். ஒன்றிரண்டு பசுவு மெருதும் வாங்கிக் கொண்டு கன்னியைத் தீமுன்னர்க் கொடுப்ப தாரிட மணம். வேள்வியால் வந்த கன்னியைத் தீமுன்னர்க் கொடுப்பது தெய்வ மணம். கொடுப்பாருங் கேட்பாரு |
|
|