இனியிடையிட்டு வந்தமடக்கு மிடையிடாது வந்தமடக்கு மிவ்வா றேகொள்க. அவற்றுள் சிலவருமாறு. - "தோடுகொண் டளிமுரன்றெழக் குடைபவர் துறைசேர், தோடுகொண்ட தேமலர் சுமந்தகில் கமழ்ந்தவர்தந், தோடுதைந்த செஞ்சாந் தணிந்திளை முலையிடைதோய்ந்த, தோடுதண் புன னித்திலந் துறைதொறுஞ் சொரியும்." எ-து. இடையிடாதன முற்றுமடக்கு. "பரவி நாடொறும் படிய வாம்பல் புகழ்பரப்பு, மிரவி சீறிய படிய வாம்பதி யெரிகவர, விரவி மாண்பயில் படியவாம் வேய்தலை பிணங்கு, மருவி வாரணம் படியவாம் பல்பணை மருதம்." எ-து. இடையிட்டிடைமுற்று மடக்கு. "சொன்ன நாளிது சுரும்பிம ரிதழிபோன்கால, மின்னு வாள்விட வில்வ ளைத் தூன்றிய கால, மின்ன கார்முகி லினமிருண் டெழுதரு கால, மன்னர் வாரலா தாம்வரு மயிலினம் வருகாலம்." எ-து. இடையிட்டிறுதி முற்றுமடக்கு. இவை யிடையிட்டு வந்தன விவற்றது விகற்பம்வந்துழிக்காண்க. இனி யிடையிட்டு மிடையிடாதும் வருவனவற்றுள் சிலவருமாறு:- "வாமானமான மழைபோன் மதமான மான,நாமான மான முகிறாழ்ந் ததமான மான, தீமான மானவர் புகழ்த்திற மானமான, காமான மான கற்சுரங்கன் மானமான." எ-து. இடையிட்டு மிடையிடாதும் வந்து மிடையு மிறுதியுமடக்கிய மடக்கு. பிறவும்வந்துழிக்காண்க. "வருமறை பலமுறை வசையறப் பணிந்தே, மதியொடு சடைமுடி மருவுமப் பணிந்தே, யருநட நவில்வது மழகுபெற் றன்றே, யருளொடு கடவுவ தணிகொள் பெற் றன்றே,திருவடி மலர்வன திகழொளிச் சிலம்பே, தெளிவுட னுறைவது திருமறைச் சிலம்பே, யிருவினை தடிப்பவ ரடைபதத் தன்றே, யிமையவர் முதலவ னென நினைத் தன்றே." என வருவனவற்றுள் வேறுபாடுமறிக. அன்றியும், | அம்மடக்கலங்காரங்கள் வேறுபாடு வருமாறு:- தண்டியலங்காரம். - "அடிமுழுது மடக்குத லாங்கதன் சிறப்பே." என்றாராகலின், இரண்டடிமடக்கும், மூன்றடி மடக்கும், நான்கடி மடக்கும், என மூவகைப்படும். அவற்றுள் சிலவருமாறு:- "விரைமேவு மதமாய விடர்கூடு கடுநாக, விரைமேவு மதமாய விடர்கூடு கடுநாக, வரைமேவு நெறியூடு தனிவாரன் மலைவாண, நிரைமேவு வளைசோர விவளாவி நிலைசோரும்." எ-து. முதலீரடிமடக்கு. "கடன்மேவு கழிகாதன் மிகநாளு மகிழ்வார்க, ளுடன்மேவு நிறைசோர மெலிவார்தம் முயிர்நோவுங், கடன்மேவு கழிகாதன் மிகநாளு மகிழ்வார்க, ளுடன்மேவு பெடைகூடு முறுகாலு முரையார் கொல்." எ-து. முதலடியு மூன்றாமடியு மடக்கு. "கருமாலை தொறுகாதல் கழியாது தொழுதாலு, முருமாய மதனாக மடுமாறு புரிவார்முன், னுருமாய மதனாக மருமாறு புரிவார்முன், வருமாய வினைதீர வொருநாளு மருளார்கொல்.' எ-து. இடையீரடி மடக்கு. "மறை நுவல் கங்கை தாங்கினார், நிறைதவ மங்கை காந்தனார்,குறையென வண்டர் வேண்டவே, மறைநுவல் கங்கை தாங்கினார்" எ-து. முதலடியு மீற்றடியு மடக்கு, "கொல்லியம் பொருப்பனை மேவார் கோனக, ரில்லெரி மேவுவ தி யம்பல் வேண்டுமோ, வல்லியந் தாமரை வனங்களாயின, வல்லியந்தாமரை வனங்க ளாயின." |
|
|