பக்கம் எண் :

கற்பியல் சூ.6119
 

யாங்கே யவர்வயிற் சென்றீ யணிசிதைப்பா
னீங்கெம் புதல்வனைத் தந்து”

  

இது  தலைவனிடத்தினின்றும்  புதல்வனைச்  சிறைத்தது.  ‘ஞாலம்  வறந்தீர’ என்னும் மருதக்கலி 
(82) யுள்
  

* ”அவட்கினிதாகி விடுத்தனன் போகித்
தலைக்கொண்டு நம்மொடு காயுமற்றீதோர்
புலத்தகைப் புத்தேளில் புக்கானலைக்கொரு
கோறா நினக்கவள் யாராகுமெல்லா
வருந்தியா நோய்கூர நுந்தையையென்றும்
பருந்தெறிந் தற்றாகக் கொள்ளுங் கொண்டாங்கே
தொடியு முகிரும் படையாக நுந்தை
கடியுடை மார்பிற் சிறுகண்ணுமுட்காள்
வடுவுங் குறித்தாங்கே செய்யும் விடுவினி
யன்னபிறவும் பெருமானவள் வயிற்
றுன்னுத லோம்பித் திறவதின் முன்னிநீ
யையமில்லாத வரில்லொழிய வெம்போலக்
கையாறுடைய வரில்லல்லாற் செல்ல
லமைந்ததினி நின்றொழில்.

  

இது காதற் பரத்தையர்பாற் புதல்வன் செல்லாமற் சிறைத்தது.
  

அவன் வயிற் பிரிப்பினும்-தன்னொடு மைந்தரிடை உறவு நீக்கி அவனைத் தலைவனோடு சார்த்துதற்
கண்ணும்,
  

என்றது, எமக்கிவன் யாரென்று அயன்மை கூறுதலாம்,  


* பொருள் : அப்பரத்தையாகிய தாய்க்கு இனியவனாய் இருந்து பின்னர் நம்மைக் காயும் புதியவள்
இல்லில்  புக்கான்  (நின்மகன்).  இது  சேடியின்  கூற்று.  இனித்  தலைவி,  இவனை அடிக்கக்
கோல்  கொண்டுவா  (எனக் கூறிப் பின்னர்) நினக்கு அவள் என்ன உறவுடையாள்? ஏடா! நான்
வருந்தித்துன்புற  நின்  தந்தையை பருந் தடித்துச் செல்வதுபோல் மடக்கிக் கொண்டாள். மேலும்
தன் தொடியும்  நகமுமே படையாகக்  கொண்டு  நின்  தந்தை  மார்பிலும்  பிற  இடங்களிலும்
அஞ்சாமல்  வடுப்படுத்தினாள். அதனால் மகனே! அப்பரத்தையிடம் செல்லாதே. அழுகையைவிடு.
நின் தந்தையைப் பற்றி தன்னிடம் வருவானோ மாட்டானோ என்ற ஐயம் இல்லாமல் தன்னிடமே
வருவான் என்ற துணிவுடைய பரத்தையர் வீட்டை  விடுக.  என்போல்  செயாற்றுக்  கிடக்குமவர்
வீடல்லால்  வேறு  வீட்டிற்  செல்லாதே. இனி இதுவாகவே நின் தொழில் அமைந்தது.