இது, பருவங் கண்டழிந்து கூறியது. |
“உதுக்காணதுவேயிது வெனமொழிகோ நேர்சினை யிருந்த விருந்தோட்டுப் புள்ளினந் தாம்புணர்ந்தமையிற் பிரிந்தோருள்ளா தீங்குரலகவக் கேட்டுநீங்கிய வேதிலாள ரிவண்வரிற் போதிற் பொம்மலோதியும் புனைய லெம்முந்தொடஅ லென்குவ மன்னே”1 |
(குறுந்-191) |
இது காய்ந்து கூறியது. |
“முதைப்புனங் கொன்ற வார்கலியுழவர் விதைக்குறு வட்டிபோதொடு பொதுளப் பொழுதோ தான்வந்தன்றே மெழுகான் றூதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி மரம்பயி லிறும்பினார்ப்பச் சுரனிழிபு மாலை நனிவிருந்தயர்மார் தேர்வரு மென்முன்னுரை வாராதே”2 |
(குறுந்-155) |
இது பொழுதொடு தான்வந்தன்றெனப் பொழுதுகண்டு மகிழ்ந்து கூறினாள். |
“அம்மவாழி தோழி சிறியிலை நெல்லி நீடியகல்காய் கடத்திடைப் பேதை நெஞ்சம் பின்படச் சென்றோர் |
|
1. பொருள் : தோழீ! இதோபார்! மரக்கிளையில் இருந்த பறவைக் கூட்டங்கள் தாம் துணையொடு கூடியிருத்தலின் பிரிந்தோர் உறும்துயரை நினையாவாய் ஒன்றையொன்றழைத்துக் கூவும் கூப்பீட்டைக் கேட்கும் நம்மை நினையாது நீங்கிய தலைவர் இனிவரின் வந்து கூந்தலைத் தடவி ஒப்பனை செய்யின் செய்யாதீர் என்றும், தொடின் தொடாதீர் என்றும் கூறுவேம். |
2. பொருள் : தோழீ! புனத்தின் மேடுகளை வெட்டிச் சமன் செய்து விதைத்து வந்த ஒலிமிக்க உழவரது விதைப்புட்டிலில் மலர்கள் நிறையும்படிக் கார்காலம் வந்தது. ஆனால் மணியோசை காட்டில் ஒலிக்கச் சுரவழிகளைக் கடந்து தலைவர் தேரானது புதிய விருந்து அயரும்படி இதோ வந்தது என்னும் சொல்தான் இன்னும் வரவில்லை. |