கல்லினும் வலியர் மன்ற பல்லித ழுண்கணழப் பிரிந்தோரே”1 |
(ஐங்குறு-334) |
இது வன்புறை எதிரழிந்து கூறியது. |
“அம்மவாழிதோழி யாவதும் வல்லா கொல்லோ தாமேயவண கல்லுடை நன்னாட்டுப் புள்ளினப் பெருந்தோ டியாஅந்துணை புணர்ந்துறைதும் யாங்குப் பிரிந்துறைதி யென்னுமாறே”2 |
(ஐங்குறு-333) |
இது புள்ளை நொந்து கூறியது. |
“காதலருழையராகப் பெரிதுவந்து சாறுகொளூரிற் புகல்வேன் மன்ற வத்த நண்ணிய வங்குடிச்சீறூர் மக்கள் போகிய வணிலாடு முன்றிற் புலப்பில் போலிப் புல்லென் றலப்பென் றோழியவரகன்ற ஞான்றே”3 |
(குறுந்-41) |
இஃது ஆற்றுவலெனக் கூறியது. |
“நீ கண்டனையோ கண்டார்க் கேட்டனையோ வொன்றுதெளிய நசையின மொழிமோ வெண்கோட்டியானை சோணைபடியும் |
|
1. பொருள் : தோழீ! கேட்பாயாக. சிறிய இலைகளையுடைய நெல்லி மரங்கள் மிக்குள்ள மலையுருகக் காயும் காட்டிடையே என் பேதை நெஞ்சம் பின்தொடரச் சென்றவர், என் பலவான இதழ் போலும் மையுண்ட கண்கள் அழப் பிரிந்தார் ஆகலின் கல்லைக் காட்டினும வலிய நெஞ்சினர் ஆவார். |
2. பொருள் : தோழீ! கேட்பாயாக. தலைவர் பிரிந்து சென்ற நாட்டுப் பறவைகள் அவரைப்பார்த்து, “யாங்கள் துணையினைப் பிரியாது உடனுறைதலை யுணர்ந்து வாழ்வேம்; நீ எப்படி நின்துணையைப் பிரிந்து உறைகிறாய்” என்று கூறாதனவாயின. அதனால் அவை ஒரு சிறிதும் வன்மையுடையனவல்லவோ? |
3. பொருள் : தோழீ! காதலர் அருகிருக்கும் போது திருவிழாக் கொள்ளும் ஊர்போல மகிழ்ந்திருப்பேன் உறுதியாக. அவர் பிரிந்தபோதோ பாலை நிலவழியில் உள்ள சிற்றூர்களில் மக்கள் விட்டு நீங்கிய அணில்கள் மட்டும் விளையாடக்கூடிய முற்றத்தையுடைய வீடுகள் போலப் புல்லென்று வருந்தியிருப்பேன். |