பக்கம் எண் :

142தொல்காப்பியம் - உரைவளம்
 

இளம்
  

என்-எனின். கற்பின்கண் தோழி கூற்று நிகழும் இடம் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்)   பெறற்கரும்   சிறப்பு   முதலாக  மரபுடையெதிரும்  உளப்படப்  பிறவும்  ஈறாக  மொழியப்
பட்டவையாகவும் தோழிக்குரிய என்று கூறுவர் புலவர் என்றவாறு.
  

பெறற்கரும்     பெரும்  பொருண்  முடிந்த  பின்வந்த  தெறற்கரு  மரபிற்  சிறப்பின்  கண்ணும்
என்பது-பெறுதற்கு   அரிய  பெரும்பொருளை  முடித்த
1  பின்னர்த்  தோன்றிய  தெறுதற்கரிய  மரபு2
காரணத்தால் தலைவனைச் சிறப்பித்துக் கூறுமிடத்தும் தோழி கூற்று நிகழும் என்றவாறு.
  

பெரும் பொருள் ஈண்டு வரைவிற்கேற்றது. தெறுதல்-அழல் நோக்குதல்.
  

உதாரணம்:
  

“அயிரை பரந்த அந்தண் பழனத்து
ஏந்தெழில் மலர்ந்த தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர்வேட்டாங்கிவள்
இடைமுலைக் கிடந்து நடுங்கலானீர்
தொழுதுகாண் பிறையில் தோன்றியான் உமக்கு
அரியம் ஆகிய காலைப்
பெரிய நோன்றனிர் நோகோயானே.”
3

(குறுந்-178)
  

எனவரும்.  


1. பெறுதற்கரிய  பெரும்  பொருள்  முடிதலாவது,  பெறுதற்கரிய  மிக்க  பரிசப்  பொருள்  தந்தமையால்
வதுவை முடிதலாம்.

2. மரபு  என்பது  கற்புக்  காலத்துத்  தலைவனைச்  சிறப்பிக்கும்  வழக்கம். சிறப்பித்தல் என்பது களவுக்
காலத்துப் பிரிவாற்றியிருந்ததைச் சிறப்பித்தலாம்.

3. பொருள் : தலைவ! அயிரை மீன்கள் பரந்த  பொய்கையில்  ஆம்பல்   மலரைப்  பறிப்பவர்   நீர்
வேட்கை கொண்டதுபோல இக்காலத்து இவள் முலையிடைத் துயின்றும் வேட்கை தீராது நடுங்குதலை
ஒழியவில்லை; தொழுது  காணற்குரிய  பிறை  நினைத்த  மாத்திரத்தில்  தோன்றாது  நாள்கள்  பல
இடையிட்டுத்