தோன்றுவதுபோல நினைத்தபோதெல்லாம் பெறுதற்கியலாது பலகாலம் இடையிட்டு இடையிட்டுப் பெறுமாறு அமைந்த களவொழுக்கக் காலத்து மிகவும் வேட்கையைத் தாங்கிப் பொறுத்திருந்தீர்போலும். அதனை நினைந்து யான் இப்போது வருந்துகிறேன். 1. பொருள் : வேங்கை மரத்திருந்த மயில் இழையணிந்த மடந்தை போலத் தோன்றும் நாடனே! நல்ல மனையிடத்து இவளை மணம் செய்யும் இந்த நாளில் இவள் கூந்தலில் மலர் சூட்டினாய்; இனிய செயலே செய்தாய் எந்தையே நீ நெடிது வாழ்க. 2. பொருள் : நெஞ்சமும் சொல்லும் கொடியவாகத் தாயானவள் தலைவியைச் சினக்க யாம் சூளுரைத்த தலைவனைக் காப்பாயாக என்று தெய்வம் மறைந்து துறையும் குன்றத்தில் பிறர் அறியாதபடி மறைந்து அத் தெய்வத்தை வணங்கினோம். அதன் பயனை இன்று நீ வரைந் தெய்தியமையால் பெற்றேம். |