2. பொருள் : தெள்ளிய துறையிடத்துப் பொய்கையில் வரால் மீனினம் உகளும் தண்துறை யூர! ஒண் தொடியைப் பாராமல் மனையைவிட்டு நீங்கி அச்சேரிப் பரத்தையரிடம் செல்வதை ஊராண்மை (உதவி செய்யும் ஆண்மை)யாகக் கொள்வது நினக்குத் தக்கதோ? கூறுக (இப்படித் தோழி கூறியது அவன் வணங்கியபோது ஏற்றுக்கொண்ட நிலையில் என்க). 3. புறம்படு விளையாட்டு-புறத்தே போந்து பரத்தையரொடு ஆடிய விளையாட்டு. 4. புகர்-குற்றம், புகர்ச்சி-குற்றப்படுதல். |