பக்கம் எண் :

148தொல்காப்பியம் - உரைவளம்
 

மறுவருஞ் சிறுவர் தாயே
தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே
1

(குறுந்-45)
  

எனவரும்,
  

சிறந்த  புதல்வனைத்  தேராது  புலம்பினும் என்பது-இருவர்க்குஞ் சிறந்த புதல்வனை நினையாமையால்
தலைமகன் தனிமையுறுதற் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.
  

உதாரணம்:
  

“நெடுநா ஒண்மணி கடிமனை இரட்டக்
குரையிலைப் போகிய விரவுமணற் பந்தர்ப்
பெரும்பாண் காவல் பூண்டென ஒருசார்த்
திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப
வெளியுற விரிந்த அறுவை மெல்லணைப்
புனிறுநாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட் டீரணிப்
பசுநெய் கூர்ந்த மென்மையாக்கைச்
சீர்கெழு மடந்தை யீரிமை பொருந்த
நள்ளென் கங்குற் கள்வன்போல
அகன்துறை ஊரனும் வந்தனன்
சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே”
2

(நற்றிணை-40)
  

எனவரும்.
  

“நுண்ஞாண் வலையிற் பரதவர் போத்தந்த
பன்மீன் உணங்கல் கவருந் துறைவனைக்
கண்ணினாற் காண அமையுங்கொல் என்றோழி
வண்ணந் தாவென்கந் தொடுத்து”
3

(ஐந்திணையெழு-14)


1. பொருள் : நாட்காலையே எழுந்து சிறிய தேரைச் செலுத்துதற்கேற்பப் பண்ணி பரத்தையரைத் தழுவப்
போன ஊரன் (தலைவன்) பெரிதும்   விளக்கமுடையன்  ஆனான்  என்றால்  மகப் பயந்த தாயாகிய
தலைவி மனம் சுழல்வதானாள். அதாவது   அவனை  மறாது   ஏற்பாளானாள்.  அதனால் உயர்குடிப்
பிறத்தல் என்றும் துன்பந் தருவதேயாகும்.

2. பொருள்: பக்கம் 52ல் காண்க.

3. பொருள்  : நுண்ணிய  நூலானியன்ற  வலையினால்  பரதவர்  பிடித்துவந்த  பலமீன்  உணங்கலைப்
புட்கள்