பக்கம் எண் :

கற்பியல் சூ.9151
 

மீன்சினை அன்ன வெண்மணற்குவை இக்
காஞ்சி நீழல் தமர் வளம்பாடி
ஊர்க்குறு மகளிர் குறுவழி விறந்த
இறாஅல் அருந்திய சிறுசிரல் மருதின்
தாழ்சினை யுறங்குந் தண்துறை ஊர
விழையா உள்ளம் விழையுமாயினும்
என்றும் கேட்டவை தோட்டியாக மீட்டாங்கு
அறனும் பொருளும் வழாமை நாடித்
தற்றகவுடைமை நோக்கி மற்றதன்
பின்னாகும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம் அதனால்
அரிய பெரியோர்த் தெரியுங்காலை
நும்மோர் அன்னோர் மாட்டும் இன்ன
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்
மெய்யாண்டுளதோ இவ் உலகத்தானே”
1

(அகம்-286)
  

எனவரும்.
  

அவ்வழி    யுறுதகை  யில்லாப்  புலவியின்  மூழ்கிய  கிழவோள்  பால்நின்று  கெடுத்தற்  கண்ணும்
என்பது-மேற்சொல்லிய  வாற்றாற்     தலைவன்  பிழைத்தவழி அவனாலுறுந்தகைமை யில்லாத புலவியின்
மூழ்கிய தலைவி பக்கத்தாளாகி நின்று அதனைக் கெடுத்தற் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.
  

உதாரணம்:
  

“மானோக்கி நீயழ நீத்தவன் ஆனாது
நாணிலனாயின் நலிதந்தவன்வயின்
ஊடுவதென்னோவினி”

(கலித்-87)

1. பொருள் : காஞ்சி   மர  நிழலில்   ஊர்ச்  சிறுமிகள்  கரும்பாகிய  உலக்கையால்  முத்துபோலும்
வெண்மணல்குவியலைத்  தம்மவர் வளம்பாடிக் குற்றும்போது  சிரற்  பறவைகள் இறால்களை உண்டு
மருதமரக் கிளைகளில் உறங்கும் ஊரனே விரும்பலாகாத அறனல்லனவற்றை உள்ளம் விரும்பினாலும்
பெரியோர்வாய்க் கேட்ட நல்லனவாகிய தோட்டியைக்  கொண்டு  உள்ளமாகிய  யானையினை மீட்டு
அறம்பொருள் தவறாமல் ஆய்ந்து தன்  தகவுக்கு   ஏற்றன  பார்த்து அதன் பின்னரே நினைத்ததை
முடித்தல் செய்தல் வேண்டும். அதுவே பெரியோர் ஒழுகலாறாம். ஆராயுங்கால் நும்போன்றோர்மாட்டும்
இத்தகைய பொய்யொடு கலந்த சொற்கள் தோன்றின்மெய் என்பது எங்குளதாகும்?