பக்கம் எண் :

152தொல்காப்பியம் - உரைவளம்
 

எனவரும்.
  

உணர்ப்புவயின்     வாரா  வூடலுற்றோள்வயி  னுணர்த்தல்  வேண்டிய  கிழவோன்பானின்று   தான்
வெகுண்டாக்கிய   தகுதிக்   கண்ணும்  என்பது-தலைவன்  ஊடல்   தீர்க்கவும்  அதன்   வழி   வாராத
ஊடலுற்றோள்வயின்  அவ்வூடலைத்  தீர்த்தல்  வேண்டிய தலைவன்  பக்கத்தாளாகி  நின்று  தலைவனை
வெகுண்டு
1 நின்றுண்டாக்கிய தகுதிக் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.
  

“உப்பமைந் தற்றால் புலவி அது சிறிது
மிக்கற்றால் நீளவிடல்”
2

(குறள்-1302)
 

எனவரும்.
  

அருமைக்     காலத்துப் பெருமை காட்டிய எளிமைக் காலத்திரக்கத்தானும் என்பது-தாரியராகக் களவு
காலத்துத்  தமது பெருமையைக் காட்டிய தாம்   எளியராகிய கற்புக் காலத்து. இது இரக்கத்தின் கண்ணும்
கூற்று நிகழும் என்றவாறு.
  

பெருமை     காட்டிய விரக்கம் எனக்கூட்டுக. இதனாற் சொல்லியது வாளாதே இரங்குதலன்றிப் பண்டு
இவ்வாறு   செய்தனை   இப்பொழுதிவ்வாறு    செய்யா  நின்றனைஎனத்  தமதுயர்ச்சியுந்  தலைமகனது
நிலையின்மையுந்  தோற்ற  இரங்குதலாயிற்று.  இதுவும்   புலவி மாத்திரமன்றித் தலைவனீங்கி யொழுகும்
ஒழுக்கம் மிக்கவழிக் கூறுவதெனக் கொள்க.
  

உதாரணம்:
  

“வேம்பின் பைங்காயென்தோழிதரினே
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத்திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கு மென்றனிர்
ஐய வற்றால் அன்பின் பாலே”
3

(குறுந்-196)
 

எனவரும்.  


1. வெகுண்டு-தலைவியை வெகுண்டுகூறி உண்டாக்கிய தகுதி-தலைவன் மாட்டு அன்புண்டாக்கிய தகுதி. 

2. பொருள் : புணர்ச்சி  முன்நிகழும்  ஊடல்  உணவுக்கு அளவாக  உப்பு  அமைந்ததுபோல் ஆகும்.
அவ்வுப்பு சிறிது அதிகப் பட்டமைபோல் ஆகும். ஊடல் நீட்டிப்பது.

3. பொருள் :  ஐய!     வேப்பங்காயை   என்   தோழி  களவுக்  காலத்தில் தந்தபோது  அதனைத்
தேன்பொருந்திய