பாணர் கூத்தர் விறலியரென்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும் என்பது - பாணராயினுங் கூத்தராயினும் விறலியராயினும் இத்தன்மையர் விரும்பிச் சொல்லிய குறையுறும் வினைக்கெதிராகவுங் கூற்று நிகழும் என்றவாறு. |
குறையுறும் வினை குறைவினை யெனஒட்டிற்று. அது சொல்லிய என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று. |
உதாரணம்: |
“புலைமகன் ஆதலிற் பொய்ந்நின் வாய்மொழி நில்லல்பாண செல்லினிப் பரியல் பகல் எஞ்சேரிக் காணின் அகல் வயலூரன் நாணவும் பெறுமே”1 |
எனவும், |
“அணிநிறக் கெண்டை ஆடிடம் பார்த்து மணிநிறச் சிறுசிரல் மயங்குநம் பொய்கை விரைமலி காற்றா விருந்தினம் யாமென முழவிமிழ் முன்றில் முகம்புணர் சேர்த்தி எண்ணிக்கூறிய இயல்பினின் வழாஅது பண்ணுக்கொளப்புகுவ கணித்தோபாண செவிநிறை உவகையேம் ஆக இது நாணன்மைக் குரைத்துச் சென்றீமே” |
எனவும் வரும். |
நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர் காத்த தன்வயிற் கண்நின்று பெயர்ப்பினும் என்பது - தலைவியை நீத்த கிழவனை அவளுடன் நிகழுமாறு படுத்தல் வேண்டி அவனைப் புறங்காத்த தன்னிடத்துற்ற தலைமகனைக் கண்ணோட்டமின்றிப் பெயர்த்தற் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. |
பூங்கட்டி என்று உண்டனிர். இக்காலத்தில் பாரி பறம்புமலையில் உள்ள குளிர்ந்த சுனைத்தண்ணீரைத் தை மாதத்தில் தந்தாலும் வெப்பமாகவுளது; மேலும் உவர்க்கிறது என்று கூறுகின்றீர். இதுதான் அன்பின் பகுதியோ? 1. பொருள்: பாண! நீ புலைமகன் ஆதலின் நின்வாய் வரும்மொழி பொய்யாம். இங்கு நில்லாதே. செல்க; இனி அவர்பால் பரிந்து பேசாதே. பகலிலே எம் சேரிப்பக்கம் நீவரின் வயலூரன் நாணவும் நேரும். |