பக்கம் எண் :

154தொல்காப்பியம் - உரைவளம்
 

உதாரணம்:
  

“மனையுறு கோழிக் குறுங்காற்பேடை
வேலி வெருகினமாலை யுற்றெனப்
புகுமிடன் அறியாது தொகுபுடன் குழீஇப்
பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந்தாஅங்
கின்னா திசைக்கும் அம்பலொடு
வாரல். வாழியர் ஐயஎம் தெருவே”
1
 

(குறுந்-139)
  

எனவரும்.
  

பிரியுங்காலை   யெதிர்நின்று   சாற்றிய  மரபுடை  எதிரும்  உளப்பட என்பது-தலைவன்  சேயிடைப்
பிரியுங் காலத்து முன்னின்று சொல்லிய மரபுடை மாறுபாடும்
2 என்றவாறு.
  

எனவே     அகத்திணையியலுட்  கூறப்பட்டது  களவுகாலத்தை  நோக்கிக்  கூறுதலான்  அயலிதாகக்
கூறப்பெறும்  என்பதூஉம்  இவ்வோத்தினுட்  செலவழுங்குவித்தல்   பார்ப்பார்க்குரித்தாகக்  கூறுதலானுங்
கற்பினுட்  பிரிவு  மரபு கெடாமற் கூறவேண்டும் என்பதூஉம் கருத்து. மரபினாற்  கூறுதலாவது குற்றேவல்
முறைமையாற்  கூறுதல். பிரிவை அகத்திணையியலுள் வைத்ததனான், ஆண்டுக்கூறிய  கிளவி  இருவகைக்
கைகோளிற்கும்  பெரும்பான்மை யொக்கும் எனக் கொள்க. உடன்போக்கும் ஒக்குமோ  எனின்  கற்பினுள்
உடன்போக்கு  உலகியலுட் பெரும்பான்மையென்று கொள்க. இக்கூற்றுத் தலைமகன்  மாட்டுந்  தலைமகள்
மாட்டுமாம்.
  

உதாரணம்:
  

“அறன்இன்றி அயல்தூற்றம் அம்பலை நாணியும்
வறனீந்தி நீசெல்லும் நீளிடை நினைப்பவும்


1. பொருள் :   ஐய!    வீட்டுப்    பெட்டைக்   கோழியானது     மாலைப்பொழுது    வந்ததாகத்
தம்மையிரையாகவுண்ணக் காட்டுப்பூனைக் கூட்டம்  வேலிப்பக்கம் வர அஞ்சிப் புகலிடம் காணாமல்
தன்  குஞ்சுகளை   யாவும்   ஒன்றுசேரக்  கூடும் பொருட்டு  அழைக்கும் ஒலிபோலக் கேட்பதற்கு
இன்னாத பழிச் சொற்களோடு எம்வீட்டுத் தெருப்பக்கம் வாரற்க.

2. மரபுடைமாறுபாடு-மரபால்  அதாவது குற்றேவல் முறையால்  கூறும்  எதிர்மறுத்துக்  கூறும்  கூற்று.
அதாவது செலவழுங்குவித்தல்.