* கருத்து : தலைவ! அறனில்லாமல் அயல்மகளிர் தூற்றும் அம்பலுக்கு நாணியும், நீ பிரிந்து செல்லும் நீண்ட வழியின் கொடுமை நினைந்தும் வளையல் கழல, கண்ணீர் மல்க, தாங்கரிய நோயொடு பொலிவற்ற நுதலுடைய இவள் தன் அழகு கெடவும் வினை விரும்பியவனே இப்பொழுது கேள். நின்னையுயிராகவுடைய இவள் நீ விட்டுப் பிரியின் உயிர்வாழாள் எனக் கூறியாம் பிரிவைத் தவிர் என இரப்பவும் எம் சொற்களைக் கொள்ளவில்லை. ஆனால் நீ கடந்து செல்லும் வழியில் உள்ள நீர் அற்ற வறிய சுனையில் இலையொடு வாடிய அழகிய மலர்களே தடுப்பனவாகும். விரைவில் நீ இவளைப் பிரிவாயானால் இவள் அழகு வாடும் என்று நினக்கு ஏற்கும் வகையில் யாம் இரப்ப |