பக்கம் எண் :

20தொல்காப்பியம் - உரைவளம்
 

முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப
அஞ்சினள் உயிர்த்த காலை யாழநின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சா துரையென
இன்னகை இருக்கைப் பின்யான் வினவலின்
செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர
அகமலி உவகையாள்ஆகி முகன் இகுத்து
ஒய்யென இறைஞ்சி யோளே மாவின்
மடங்கொள் மதைஇய நோக்கின்
ஒடுங்கீ ரோதி மாஅயோளே”
1

(அகம்-86)
  

இதனுள்     ‘முயங்கல்  விருப்பொடுமுகம்  புதை திறப்ப  அஞ்சினள் உயிர்த்த காலை’ என்பதனால்
இயற்கைப்  புணர்ச்சியின்மையும் ‘அகமலி யுவகையளாகி முகனிகுத்து  ஒய்யென  விறைஞ்சி’ என்பதனால்
உள்ளப் புணர்ச்சி யுண்மையும் அறிக. பிறவும் அன்ன.
  

எஞ்சா  மகிழ்ச்சி   யிறந்து   வரு  பருவத்தும்  என்பது-ஒழியாத  மகிழ்ச்சி  மிக்கு  வருங்காலத்துத்
தலைவன்கட்கூற்று நிகழும் என்றவாறு.
  

உதாரணம்
  

“குனிகா யெருக்கின் குவிமுகிழ் விண்டலொடு
பனிவார் ஆவிரைப் பன்மலர் சேர்த்தித்
தாருங் கண்ணியுந் ததைஇத் தன்னிட்டு
ஊரும் மடவோன் உலர்வன் கொல்லென
நீர்த்துறைப் பெண்டிர் நெஞ்சழிந்திரங்கினும்
உணராளூர் தோறு
அணிமடற் கலிமா மன்றத் தேறித்தன்
அணிநலம் பாடினும் அறியா ளென்றியான்
பெருமலை நெடுங்கோடேறிப் பெறுகென்று
உருமிடித் தீயின் உடம்பு சுடர்வைத்த
என்னுறு விழுமம் நோக்கிப் பொன்னொடு
திருமணி இமைக்குங் கோடுயர் நனந்தலை
இரவுடைப் பெண்டிரிடும்பை நோக்கித்
தெளிவு மனங்கொண்ட தீதறு காட்சி
வெளியன் வேண்மாள் விளங்குகரிபோல


1. பொருள் : பக்கம் 6ல் காண்க.