மலிகடல் உடுத்த மணங்கெழு நனந்தலைப் பலபாராட்டவும் படுவமாதோ கடைந்து கவித்தன்ன கால்வீங்கு கருங்கட் புடைதிரள் வனமுலை புலம்பல் அஞ்சிக் காமர் நுழைநுண் நுசுப்பின் தாமரை முகத்தியைத் தந்தபாலே1 |
(குணநாற்பது) |
எனவரும். |
அஞ்ச வந்த உரிமைக் கண்ணும் என்றது-தலைவன் தானும் பிறரும் அஞ்சும்படியாகத் தலைவி மாட்டு உளதாகிய கற்பாகிய உரிமைக் கண்ணும் என்றவாறு. |
உதாரணம் வந்தவழிக் காண்க.2 |
1. ‘அறிதோறறியாமை’ என்னும் குறளை நச்சினார்க்கினியர் காட்டியதே மிகப் பொருந்தும். |
பொருள் : எருக்க மலரொடு ஆவிரை மலரைச் சேர்த்திக் கட்டிய தாரும் கண்ணியும் கட்டித் தானணிந்து மடலூரும் மடவோன் இறந்துபடுவன் போலும் என நீர்த்துறைப் பெண்டிர் இரங்கவும் அதனை உணராதவளாயும், பொதுமன்றத்தேறி அவள் நலம்பாடினாலும் அறியாதவளாயும் உள்ள அவளை நான் வரைபாய்ந்து அடைவேன் என்றுகூறி உடம்பில் வெப்பம் மிகக் கொண்ட என் துன்பத்தைப் பார்த்து, பொன்னும் மணியும் உடைய தலையுடைய இரவுடைப் பெண்டிரின் துன்பம் நோக்கித் தெளிவுமனம் கொண்ட வெளியன் வேண்மாள் என்பவன் கூறிய கரியானது (சான்று) பலராலும் பாராட்டப்படுவது போலக்கடைந்து கவிழ்ந்து வைத்தாற்போல உள்ள கருங்காம்புடைய புடைதிரண்ட முலைகளையும், நுசுப்பையும் தாமரை முகத்தையும் உடைய இத்தலைவியை யான் நினைந்து புலம்புதற்கு அஞ்சி எனக்குத் தந்த ஊழ் பலவாகப் பாராட்டப் பொருந்துவதாகும். இது களவு நிகழ்ச்சியில் அரிதாகிய புணர்ச்சி கற்பில் அரிதின்றி நிகழ்வதைக் கருதிக் கூறியது எனக் கொள்க. |
2. உதாரணம் நச்சினார்க்கினியர் காட்டியதே சாலும். |
கோவலன் கண்ணகியை நோக்கி, “இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன் சிறுமுது குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் வழுவெனும் பாரேன் எழுகென எழுந்தாய் என்செய்தனை” |
(சிலப்) |
எனக்கூறியதைக் கொள்ளலாம்-சிவ. |