பக்கம் எண் :

கற்பியல் சூ.523
 

பெற்ற     தேஎத்துப்   பெருமையின்   நிலைஇக்   குற்றஞ்சான்ற   பொருள்   எடுத்துரைப்பினும்
என்றது-வரைந்து   பெற்றவழித்   தலைவியைப்  பெருமையின்  கண்ணே  நிறுத்திக்  களவுக்காலத்துக்
குற்றஞ்சான்ற பொருளை யெடுத்துக் கூறிய வழியும் என்றவாறு.
  

உதாரணம்
  

“அதிரிசையருவிய பெருவரைத் தொடுத்த
பல்தேன் இறாஅல் அல்குநர்க் குதவு
நுந்தை நன்னாட்டு வெந்திறல் முருகென
நின்னோய்க்கியற்றிய வெறி நின்தோழி
என் வயினோக்கலிற் போலும் பன்னாள்
வருந்திய வருத்தந் தீரநின்
திருந்திழைப் பணைத்தோள் புணர்ந்து வந்ததுவே”
1
 

இதனுள்    ‘நுந்தை  நன்னாட்டு’  என்றதனால்  தலைவி   பெருமையும்  நின்னோய்க்கியற்றிய  வெறி
நின்தோழியென்  வயினோக்கலிற்போலும்’  என்றதனால்  குற்றஞ்சான்ற  பொருள்
2  என்பதும் அறிந்து
கொள்க.
  

நாமக்     காலத் துண்டெனத் தோழி ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும்  என்பது-அச்சக் காலத்து
நமக்குத்  துணையாயிற்றெனத் தோழி ஏமுறு கடவுளை ஏத்துதற் கண்ணும் தலைவன் கட் கூற்று நிகழும்
என்றவாறு.
  

உதாரணம் வந்த வழிக் காண்க.
  

அல்லல்   தீர ஆர்வமொடு  அளைஇச்  சொல்லுறு  பொருளின்  கண்ணும் என்பது-தலைவி  தன்
துன்பந்தீர ஆர்வத்தொடு பொருந்தச் சொல்லப்பட்ட பொருண்மைக் கண்ணும் தலைவன் கூற்று நிகழும்
என்றவாறு, என்றது களவுக் காலத்து வருந்திய


1. பொருள் : தலைவியே!  யான்  பலகால்  வருந்திய  வருத்தம்தீர  நின்தோளைப் புணர்ந்து (மணம்
செய்து)  வந்ததற்குக் காரணம் களவுக் காலத்தில்  நின்  தந்தையின்  நல்ல  நாட்டில்  நீயுற்றநோய்
முருகனால்   வந்தது  என்று  வெறியாட்டு  அயர்ந்ததை  நின்தோழி  என்னைப்  பார்த்துக்  கூறி
வரைவுகடாயதேயாகும் போலும்.
  

2. குற்றம்  சான்ற  பொருள் என்றது தலைவியின் நோய்க்கு  முருகன்  காரணம்  என்று  கொண்டு
வெறியாடியதை,