பக்கம் எண் :

கற்பியல் சூ.533
 

மாண்வரி அல்குற் குறுமகள்
தோள் மாறுபடூஉம் வைகலோ டெமக்கே”
1

(குறுந்-101)
  

எனவரும்.
  

கைவிடின்   அச்சமும்   என்பது-தலைவியைக்  கைவிட்டவழி  அவளது  உயிர்ப்பொருட்டு  அஞ்சுதற்
கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.
  

உதாரணம்
  

“அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள்
விளி நிலை கேளாள் தமியள் மென்மெல
நலமிகு சேவடி நிலம் வடுக்கொளாஅக்
குறுக வந்து தன் கூரெயிறு தோன்ற
வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்
கண்ணிய துணரா அளவை ஒண்ணுதல்
வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன்
முளிந்த ஓமை முதையலங் காட்டுப்
பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி
மோட்டிரும் பாறை ஈட்டுவட்டேய்ப்ப
உதிர்வன படூஉங் கதிர்தெறு கவாஅன்
மாய்த்தபோல மழுகுநுனை தோற்றிப்
பாத்தி அன்ன குடுமிக் கூர்ங்கல்
விரல்நுதி சிதைக்கும் நிரைநிலை யதர
பரன்முரம்பாகிய பயமில்கானம்
இறப்ப எண்ணுதிராயின் அறத்தாறு
அன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்னவாக வென்னுநள் போல
முன்னம் காட்டி முகத்தின் உரையா
ஓவச் செய்தியின் ஒன்றுநினைந் தேற்றிப்
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு
ஆகத் தொடுக்கிய புதல்வன் புன்தலைத்
தூநீர் பயந்த துணையமைபிணையல்


1. பொருள் : இவ்வுலக  இன்பமும்  தேவர் உலக  இன்பமும்  ஆகிய  இரண்டையும்  உண்கண்ணும்
பொன்மேனியும்  வரியல்குலும்  உடைய  குறுமகளின் தோள்களை மாறி  மாறித்  தழுவலால் பெறும்
இன்பத்துடன்  கூடிய  நாளொடு  ஒத்திட்டு  ஆராய்ந்து பார்க்கின் இவ்வின்பத்துக்கு அவை ஒப்பாக
மாட்டா.