உதாரணம் |
“உண்ணா மையின் உயங்கிய மருங்கின் ஆடாப் படிவத் தான்றோர் போல வரைசெறி சிறுநெறி நிரையுடன் செல்லும் கானயானை கவினழி குன்றம் இறந்து பொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த சில்ஐங் கூந்தல் நல்லகம் பொருந்தி ஒழியின் வறுமை யஞ்சுதி அழிதக உடைமதி வாழிய நெஞ்சே நிலவென நெய்கனி நெடுவேல் எஃகிலை இமைக்கும் மழைமருள் பஃறோல் மாவண் சோழர் கழைமாய் காவிரி கடல்மண்டு பெருந்துறை இறவொடு வந்து கோதையொடு பெயரும் பெருங்கடல் ஓதம் போல ஒன்றிற் கொள்ளாய் சென்றுதரு பொருட்கே”1 |
(அகம்-123) |
எனவரும். |
மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும் என்பது-பிரிந்த தலைவன் மீட்டு வரவுவாய்ந்த வகையின் கண்ணும் என்றவாறு. ‘வரவு’ என்பது கடை குறைந்தது.2 |
உதாரணம் |
“தாழிருள் துமிய மின்னித் தண்ணென வீழுறை இனிய சிதறி ஊழிற் கடிப்பிகு முரசின் முழங்கி இடித்திடித்துப் |
1. பொருள் : நெஞ்சமே! உண்ணாமையால் வாடிய வயிற்றையும் நீராடாத விரதத்தையும் உடைய சமணச் சான்றோர் போல மலை வழிப்போம் யானைகள் அழகழியும்படியான குன்றம் கடந்து பொருள் ஈட்டுதற்கும். பிரியாய் சிலவான ஐம்பால் எனும் கூந்தலுடையாளின் மார்பைப் பொருந்தி மனையகத்தே தங்க நினைத்தால் பொருளில்லா வறுமைக்கு அஞ்சிப்போக நினைக்கின்றாய். இது எப்படியிருப்பது எனின், சோழரது காவிரி கலக்கும் கடற்றுறையில் கடல் அலையானது இறால் மீனொடு கரைசேர்வதும் உடனே அங்கு விழவயரந்தோரால் விடப்பட்ட மாலைகளை அடித்துக் கொண்டு மீளவும் கடல் சேர்வதுமாக ஒரு நிலையில் இல்லாதது போல் இருக்கிறது. என்னே நின் இருபாற்பட்ட நிலை. |
2. வரவு என்பது ‘வர’ எனக் கடை குறைந்து நின்றது, |