கடுமான் திண்டேர் கடைஇ நெடுமானோக்கி நின் உள்ளியாம் வரவே”1 |
(ஐங்குறு-360) |
எனவரும். |
சென்ற தேஎத் துழப்பு நனி விளக்கி யின்றிச் சென்ற தன்னிலை கிளப்பினும் என்பது-தான் சென்ற தேயத்து வருத்தத்தை மிகவும் விளக்கித் தலைவியை யொழித்துச் சென்ற தன்னிலைமை கிளப்பினும் கூற்று நிகழும் என்றவாறு. |
உதாரணம் |
“ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந்து உள்ளியும் அறிதிரோ எம்மென யாழநின் முள்ளெயிற்றுத் துவர்வாய் முறுவல் அழுங்க நோய்முந்துறுத்து நொதுமல் மொழியல் நின் ஆய்நலம் மறப்பெனோ மற்றே சேணிகந்து ஒலிகழை பிசைந்த நெலிசொரி ஒண்பொறி படுஞெமல் புதையப் பொத்தி நெடுநிலை முளிபுல் மீமிசை வளி சுழற்றுறாஅக் காடுகவர் பெருந்தீ ஓடுவயின் ஓடலின் அதர் கெடுத்தலறிய சாத்தொ டொராங்கு மதர்புலி வெரீஇய மையல் வேழத்து இனந்தலை மயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு ஞான்று தோன்றவிர் சுடர் மான்றாற் பட்டெனக் கட்படர் ஓதி நிற்படர்ந்துள்ளி அருஞ்செல வாற்றா ஆரிடை ஞெரேரெனப் பரந்து படு பாயல் நவ்வி பட்டென இலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு நிலங்கிளை நினைவினை நின்ற நிற்கண்டு இன்னகை இனைய மாகவும் எம்வயின் ஊடல் யாங்கு வந்தன்றென யாழநின் கோடேந்து புருவமொடு குவவுநுதல் நீவி நறுங்கதுப் புளரிய நன்னர் அமையத்து |
1. பொருள் : நெடுமான் நோக்கீ! நின்னை விரும்பும் என் நெஞ்சம் நின்னைத் தழுவுதற்குப் பெரிதும் விரும்ப அதனால் விரையும் குதிரை பூட்டிய திண்ணிய தேரினைச் செலுத்தி நின்னை நினைத்து வருதலால் எரிபரந்தால் ஒத்த ஞாயிற்றொளி மிக்க நெடியவழி கடத்தற்கரியதாயினும் எனக்கு எளிதாகும். |