பக்கம் எண் :

கற்பியல் சூ.541
 

வறுங்கை காட்டிய வாயல் கனவின்
ஏற்றேக் கற்ற உலமரல்
போற்றா யாகலின் புலத்தியால் எம்மே”
1

(அகம்-39)
  

எனவரும்.
  

அருந்தொழின்     முடித்த  செம்மற்காலை விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும் என்பது-அரிய
வினையை முடித்துவந்த தலைமைக்  காலத்து  விருந்தினரோடு கூட நல்லவற்றைக் கிளத்தி விருப்பமுறுதற்
கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு,
  

உதாரணம் வந்தவழிக் காண்க.
  

மாலை     ஏந்திய பெண்டிரு மக்களுங் கேளி ரொழுக்கத்துப் புகற்சிக் கண்ணும் என்பது-தலைவனை
எதிர்கொண்டு  மங்கலமாக  மாலையேந்தி  நின்ற  பெண்டிரும் மக்களும் கேளிரும் ஒழுகும்  ஒழுக்கத்து
விருப்பத்தின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு,
  

கேளிரும்   என்னும்   உம்மை   எஞ்சி   நின்றது2.  ஈண்டு  ஒழுக்கமாவது  சொல்லாது  பெயர்ந்தீர்
என்றானும், இளமையும்


1. பொருள் : பெண்டிர்க்குத் துயர்தரக் கூடாது என்று பெரியோர் விலக்கியதைப்  பழித்த உள்ளமொடு
சுரவழிச் சென்றவிடத்து எம்மை  நினைத்தீரோ  என  என்னை வினவும்  தலைவீ!  முறுவல் மறைய
வருந்திப் புறம்பான சொல்லைச் சொல்லாதே. நின் அழகை மறப்பேனோயான்? மூங்கில்கள் உரசலால்
எழுந்த  தீயானது காற்றால் எங்கும் பரக்கப் புல்லிடங்களும் பற்ற எங்கும் வழி தெரியாமல் அடைபட
வழிச்செல்லும் வணிகரோடு புலிக்கு வெருவிய யானைகளும் வழிதெரியாமல் மயங்கும்படியான காட்டு
வழியில், நின்னையே நினைந்து மேலே செல்ல வியலாத  அரிய  வழியில்,  திடீரெனப் படுக்கையில்
வந்த மான்போல  கழலும்  வளையல்களைச்  செறித்து  தாழ்ந்த பார்வையுடன்  நிலத்தைக் கிளறும்
நிலையில்  நின்ற  நின்னைப்  பார்த்து,  நாம் இப்படிச் சேர்ந்திருக்கவும் என்னிடம்  ஊடல் நினக்கு 
எப்படி  வந்தது  எனக்கூறி  நின்   புருவம்   நுதல்களைத்  தடவிக்  கூந்தலைக்  கோதிய  நல்ல
சமயத்தில்  கூந்தலில்லா வெறுங்கையை  ஆக்கிய  அப்பொய்க்  கனவில்  தூக்கத்தைக்   கொண்டு
நின்னைக்  காணாது  உற்ற வருத்தத்தை நீ அறியாய்; ஆதலின் என்னைப் புலந்து பேசுகின்றாய்.
  

2. கேளிரும் என்பது கேளிர் என நின்றது நோக்கிக் கூறியது.