பக்கம் எண் :

44தொல்காப்பியம் - உரைவளம்
 

மாண்வரி யல்குற் குறுமக
டோண்மாறு படூஉம் வைகலொடெமக்கே”
1

(குறுந்-101)
  

இது நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சி.
  

“முகனிகுத், தொய்யென விறைஞ்சியோளே”

(அகம்-86)
 

என முற்காட்டியது கரணத்தின் அமைந்து முடிந்தது.
  

எஞ்சா  மகிழ்ச்சி  இறந்து  வரு பருவத்தும்-அதன் பின்னர் ஒழியாத மகிழ்ச்சி பலவேறு வகையவாகிய
நுகர்ச்சிக்கட்புதிதாக வந்த காலத்தினிடத்தும்.
  

உதாரணம்
  

“அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ்
செறிதோறுஞ் சேயிழை மாட்டு”

(குறள்-1110)
  

என்றது     பொருள்களை  உண்மையாக  உணர்ந்த  இன்பத்தை  அறியுந்தோறும்  அவற்றை முன்னர்
இவ்வாறு  விளங்க  உணராத  அறிவின்மையை  வேறுபடுத்துக்  கண்டாற்  போலுஞ் சேயிழை மாட்டுச்
செறியுந்தொறுந்  தலைத்  தலை  சிறப்பப்  பெறுகின்ற  காமத்தை முன்னர் அறியப் பெற்றிலே மென்று
வேறுபடுத்தலென்றவாறு.
  

அஞ்ச   வந்த   உரிமைக்   கண்ணும்-தலைவனும்   பிறரும்   அஞ்சும்படி  தலைவிக்கட்டோன்றிய
உரிமைகளிடத்தும்.
  

அவை   இல்லறம்   நிகழ்த்துமாறு   தன்  மனத்தாற் பல  வகையாகக்  காணலும்  பிறர்க்குத்  தான்
கொடுத்தலுங் கற்புச்சிறத்தலுமாம்.
  

உதாரணம்
  

“உள்ளத்துணர்வுடையானோதிய நூலற்றால்
வள்ளன்மை பூண்டான் கணொண்பொரு-டெள்ளிய
வாண்மகன் கையிலயில் வாளனைத்தரோ

நாணுடையாள் பெற்றநலம்
2

(நாலடி-386)


1. பொருள்: பக்கம் 33ல் காண்க.
  

2. பொருள் :  நாணம்   உடைய   மனைக்கிழத்தி  பெற்ற   அழகு,   உள்ளத்தில்  இயற்கையான
உணர்வுடையவன்  ஓதிய  கல்வி  போன்றது;  வள்ளலின் கைப்பட்ட ஒள்ளிய பொருள் போன்றது;
தெளிந்த ஆண்மகன் கைப்பட்ட வாள்போன்றது.