பக்கம் எண் :

கற்பியல் சூ.549
 

அந்தரத்து     எழுதிய எழுத்தின் மானவந்த குற்றம்  வழிகெட  ஒழுகலும்: வந்த குற்றம் அந்தரத்து
எழுதிய  எழுத்தின்  மானவழிகெட  ஒழுகுதலும்-களவுக் காலத்து  உண்டாகிய பாவம் ஆகாயத்தெழுதிய
எழுத்துவழி கெடுமாறு போல வழிகெடும்படி பிராயச்சித்தஞ் செய்து ஒழுகுதற் கண்ணும்.
  

அது  முன்பு  போலக்  குற்றஞ்சான்ற பொருளை வழுவமைத்துக்  கொள்ளாது குற்றமென்றே கருதிக்
கடிதலாம்.
  

“பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ
மையற்ற படிவத்தால்”

(கலி-15. 14-15)
  

என்ற வழி ‘மையற்ற படிவம்’ எனத் தலைவன் கூறியதனைத் தோழி கூறியவாறு காண்க.
  

அழியல்  அஞ்சல் என்று ஆயிருபொருளினும்-வந்த  குற்றம்  நினக்கு  உளதென்று அழியலெனவும்
எனக்குளதென்று அஞ்சலெனவுஞ் சொல்லப்படும் அவ்விரு பொருண்மைக் கண்ணும்.
  

இவை   இரண்டாகக்   கொள்ளின்1   முப்பத்து   நான்காமாதலின்  இருவர்  குற்றமுங்  குற்றமென
ஒன்றாக்கியது. தெய்வத்தினாதலின் ஏதம் பயவாதென்றான்.
  

“யாயுஞாயும் யாராகியரோ
வெந்தையு நுந்தையுமெம்முறைக்கேளிர்
யானு நீயு மெவ்வழியறிதுஞ்
செம்புலப் பெய்ந்நீர் போல
வன்புடை நெஞ்சந் தாங்கலந்தனவே
2

(குறுந்-40)
  

இது நம்மானன்றி நெஞ்சந் தம்மில் தாங்கலத்தலின் தெய்வத்தான் ஆயிற்றெனத் தெருட்டியது.
  

தான்  அவட்  பிழைத்த  பருவத்தானும்  -அங்ஙனந்தெய்வத்தினான்  ஆயிற்றேனுங்  குற்றமேயன்றோ
என உட்கொண்ட அவட்கு யான் காதன் மிகுதியாற் புணர்ச்சி வேண்ட


1. இரண்டு-நினக்குளதென்று     அழியல்  என்பதும்  எனக்குளதென்று  அஞ்சல்  என்பதும்.  இப்படி
இரண்டாகக்  கொள்ளின் சூத்திரத்தில்  முப்பதின்  ஒரு  மூன்று  என்றதற்கு  மாறுபட்டு  முப்பத்து
நான்காகும்.
  

2. பொருள்: பக்கம் 24ல் காண்க.