“உழை யணந்துண்ட விரைவாங்குயர்சினைப் புல்லரை யிரத்திப் பசுங்காய் பொற்பக் கல்சேர் சிறுநெறி மல்கத்தாஅம் பெருங் காடிறந்து மெய்தவந்தனவா லருஞ் செயற் பொருட்பிணி முன்னியாமே சேறுமடந்தை யென்றலிற்றான்ற னெய்தலுண் கண்பைதல் கூரப் பின்னிருங் கூந்தலின் மறையினள் பெரிதழிந் துதியன் மண்டிய வொலிதலை ஞாட்பி னிம்மென் பெருங்களத்தியவ ரூது மாம்பலங் குழலினேங்கிக் கலங்கஞருறுவோள் புலம்புகொணோக்கே”1 |
(நற்-113) |
இஃது உருவு வெளிப்பட்டுக் கூறியது. |
“ஒன்றுதெரிந்துரைத்திசி னெஞ்சே புன்காற் சிறியிலை வேம்பின் பெரியகொன்று கடாஅஞ் செருக்கிய கடுஞ்சினமுன்பிற் களிறு நின்றிறந்த நீரலீரத்துப் பால்வீ தோன்முலை யகடு நிலஞ்சேர்த்திப் பசியட முடங்கிய பைதற் செந்நாய் மாயா வேட்டம் போகிய கணவன் பொய்யா மரபிற் பிணவுநினைந் திரங்கும் விருந்தின் வெங்காட்டு வருந்துதும் யாமே யாள்வினைக் ககல்வா மெனினு மீள்வா மெனினு நீ துணிந்ததுவே”2 |
(நற்றிணை-103) |
1. பொருள் : மடந்தையே! பொருளீட்டற்காகப் போகின்றேன் எனக் கூறியபோது தன் கண்கள் துயர்கூரத்தனது பின்னிய கரியகூந்தலில் தன்முகம் புதைய மறைந்து, உதியன் சினந்த போர்க்களத்தில் இயவர் (வாத்தியக்காரர்) ஊதும் ஆம்பற்குழல்போல அழுது வருந்தியவளின் பார்வையானது மான்கள் தழையை நிமிர்ந்து உண்ணலால் சிறிது வளைந்த கிளைகளையுடைய இலந்தை மரத்தின் காய்கள் பால் நிறைந்த வழியிடங்களில் உதிர்ந்து கிடக்கும்படியான பெரிய கட்டிடத்தில் கடந்து நாம் வந்தபோதிலும் தோன்றாநின்றது. |
2. பொருள் : நெஞ்சமே! வேப்பங்கிளையை முறித்து மதம் செருக்கிச் சினம் மிக்க களிறானது நின்று சென்றவிடத்தில் நீரால் இல்லாத ஈரமான இடத்தில் பால் |